fbpx

Rain: 10, 11, 12 ஆகிய தேதிகளில் தென் தமிழக மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை…!

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இன்று முதல் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதனால், தென் தமிழக மாவட்டங்கள், டெல்டா, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இன்று முதல் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

வரும் 10, 11, 12 ஆகிய தேதிகளில் தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. 13-ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இன்று முதல் 11-ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை, வழக்கத்தைவிட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை அதிகமாக இருக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Vignesh

Next Post

வானில் இருந்து இறங்கி கடல் நீரில் மிதக்கும் நட்சத்திரங்கள்!… எந்த இடத்தில் தெரியுமா?... எப்படி நிகழ்கிறது?

Mon Apr 8 , 2024
Maldives: சுற்றுலா பயணிகள் காண விரும்பு நட்சத்திரங்களின் கடல் என்ற இடம் மாலத்தீவின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும். இங்கு இரவு நேரங்களில் இரவு நேரங்களில் விண்மீன்கள் வானில் இருந்து கீழே இறங்கி கடல் நீரில் மிதப்பது போன்ற காட்சி தோன்றும். இது பயோலுமினசெண்ட் பிளாங்க்டன் எனப்படும் உயிரினங்களால் ஏற்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றன. இந்த காட்சியை ஏப்ரல் – அக்டோபர் காலகட்டத்தில் காணமுடியும். பயோலுமினெசென்ஸ் என்பது ஒரு வேதியியல் எதிர்வினை. […]

You May Like