அஜித் நடித்து வெளியாக உள்ள ’துணிவு’ திரையரங்க உரிமையை ’லைகா’ நிறுவனம் பெற்றுள்ளது.
நடிகர் அஜித் நடிப்பில் பொங்கல் அன்று வெளியாக உள்ள திரைப்படம் ’துணிவு’. ரசிர்கள் மத்தியல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இத்திரைப்படத்தை போனிகபூர் தயாரித்துள்ளார். இத்திரைப்படத்தில் தமிழகத்தில் ரெட்ஜெயன்ட் நிறுவனம் வெளியிடுகின்றது. இது தொடர்பான தகவல்கள் ஏற்கனவே வெளியானது. தற்போது தியேட்டரிக்கல் ரைட்ஸ் எனப்படும் திரையரங்க உரிமையை ’லைகா’ நிறுவனம் பெற்றுள்ளது. இந்த அறிவிப்பை அந்நிறுவனம் டுவிட்டரில் வெளியிட்டுள்ளது.
கடந்த ஆண்டு விசுவாசம் திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய ஹிட் கொடுத்த நிலையில் இந்த ஆண்டு ’துணிவு’ திரைப்படம் மெகா வெற்றியை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் பின்னணி இசை பணிகள் நடைபெற்று வருகின்றது என்று இசையமைப்பாளர் ஜிப்ரான் தகவல் வெளியிட்டுள்ளார். இதனால் திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு இன்னும் கூடுதலாகி உள்ளது.
துணிவு திரைப்படத்தில் மஞ்சுவாரியர், பிக்பாஸ் கவின், வீரா, ஜான் கொக்கேன், பகவதி பெருமாள், மகாநதி சங்கர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஹெச் வினோத் திரைப்படத்தை இயக்கி உள்ளார். போனி கபூர் படத்தை தயாரிக்கின்றார். ஜிப்ரான் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு நிரவ் ஷஹ் செய்துள்ளார்.