fbpx

திக் திக் நிமிடங்கள்..!! தண்டவாளத்தில் சிக்கிய பள்ளி பேருந்து..!! எதிரே வந்த ரயில்..!! பதறியடித்து ஓடிய மக்கள்..!! 40 உயிர்கள்..!!

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் கபர்கேடா பகுதியில் நேற்று மாலை 4 மணியளவில் பள்ளி பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தில் சுமார் 40 மாணவர்கள் பயணித்துக் கொண்டிருந்தனர். அந்த பேருந்து அங்குள்ள ரயில்வே கிராசிங் அருகே வந்தபோது சிவப்பு சிக்னல் விழுந்தது. ஆனால், கேட் மூடும் முன் தண்டவாளத்தை கடக்க பஸ் டிரைவர் முயன்றுள்ளார். ஆனால், பஸ் தண்டவாளத்தை கடக்கும் முன், ரயில்வே கேட் மூடப்பட்டது. இதனால், ரயில்வே கடவுப்பாதையின் நடுவே பேருந்து சிக்கிக் கொண்டது.

அப்போது, ​​மத்தியப் பிரதேச மாநிலம் சின்வாரா பகுதியில் இருந்து நாக்பூர் இத்வாரி நோக்கி பயணிகள் விரைவு ரயில் வந்து கொண்டிருந்தது. பேருந்தில் இருந்த மாணவர்கள் உதவி கேட்டு கூச்சலிட்டனர். இதனால், அதிர்ச்சியடைந்த டிரைவர் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்தார். நிலைமையை உணர்ந்த பொதுமக்கள் உடனடியாக ரயிலை நோக்கி தண்டவாளத்தில் ஓடினர். டிரைவரும், ரயில்வே கேட் இடையே தண்டவாளத்தை விட்டு பஸ்சை ஓரத்தில் நிறுத்த முயன்றார்.

மேலும் தண்டவாளத்தில் பேருந்து சிக்கியது குறித்து கேட் கீப்பர் வாக்கி டாக்கி மூலம் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். இந்நிலையில், தூரத்தில் வந்து கொண்டிருந்த போது, பலர் தண்டவாளத்தில் நிற்பதை என்ஜின் டிரைவர் கவனித்து, ரயிலை உடனடியாக நிறுத்தினார். ரயில் நிலையத்தில் இருந்து சிறிது தூரத்தில் ரயில் நின்றது. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு 40 மாணவர்கள் உயிர் தப்பினர். இதையடுத்து அனைவரும் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

பின்னர், ரயில்வே கேட் திறக்கப்பட்டு, பஸ் உடனடியாக தண்டவாளத்தில் இருந்து இறக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து கபர்கேடா காவல் நிலைய அதிகாரி தானாஜி ஜலக் கூறுகையில், “சிவப்பு சிக்னலை பார்த்து, ரயில்வே கேட் தானாக மூடும் என தெரிந்தும் டிரைவர் பஸ்சை ஓட்டியுள்ளர். எனவே இந்த சம்பவத்தில் டிரைவர் மீது தான் தவறு. டிரைவர் பள்ளி குழந்தைகளை காப்பாற்ற பஸ்சை தண்டவாளத்தின் ஓரத்தில் நிறுத்தியுள்ளார்” என்றார்.

Read More : விபத்தில் பறிபோன காதலனின் உயிர்..!! கோஸ்ட் வெட்டிங் முறையில் கரம்பிடிக்கும் காதலி..!! நெகிழ்ச்சி சம்பவம்..!!

English Summary

Seeing the red signal, the driver drove the bus knowing that the railway gate would close automatically. So the driver is at fault in this incident.

Chella

Next Post

வீட்டிற்கு தோழியை அழைத்து வரும் மனைவி..!! போதை வஸ்து கொடுத்து பலாத்காரம் செய்யும் கணவன்..!! தொழிலே இதுதானாம்..!!

Sat Jul 27 , 2024
In Tirupati, the police arrested a husband and wife who took a video and threatened to rape their friends while they were intoxicated.

You May Like