தீவிர மூளைக்காய்ச்சல் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தக்கூடிய டிக் வைரஸ் பாதிப்பு இங்கிலாந்தின் பல பகுதிகளில் கண்டறியப்பட்டுள்ளது.
சிறிய பூச்சி போன்று இருக்கும் உண்ணிகள் அதிக மரங்கள் அல்லது புல்வெளி பகுதிகளில் வாழ்கின்றன. அந்த பகுதிகள் வழியாக நடந்தால், அவை உங்கள் தோலுடன் ஒட்டிக்கொண்டு உங்கள் இரத்தத்தை உண்ணலாம். பெரும்பாலான உண்ணிகள் நோயைச் சுமக்கவில்லை என்றாலும், சில உண்ணிகள் தீவிர நோய்களை ஏற்படுத்தலாம் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.. இந்த சூழலில் உண்ணிகள் மூலம் பரவும் டிக் வைரஸ் இங்கிலாந்தின் பல பகுதிகளில் கண்டறியப்பட்டுள்ளதாக இங்கிலாந்து சுகாதார பாதுகாப்பு நிறுவனம் (UKHSA) தெரிவித்துள்ளது. இந்த வைரஸ் பரவுவதைத் தடுக்க மருத்துவமனைகளில் பரிசோதனையில் மாற்றங்களைச் செய்யுமாறு இங்கிலாந்து சுகாதார பாதுகாப்பு நிறுவனம் நிறுவனம் அறிவுறுத்தி உள்ளது. இதனால் தற்போது இங்கிலாந்து மற்றும் ஸ்காட்லாந்தில் வைரஸிற்கான மேம்பட்ட கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது..
இங்கிலாந்தில் டிக் வைரஸ் மூலம் பரவும் மூளைக்காய்ச்சல் பாதிப்புகள் 2019 முதல் கண்டறியப்பட்டுள்ளன.. தற்போது உண்ணிகள் சீசன் ஆரம்பமாக உள்ளதால் வைரஸ் குறித்த தகவல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.. இங்கிலாந்து சுகாதார பாதுகாப்பு நிறுவனத்தின் துணை இயக்குனர் மீரா சந்த் இதுகுறித்து பேசிய போத் “டிக் பரவும் என்செபாலிடிஸ் வைரஸ் இங்கிலாந்தில் மிகவும் அரிதானது என்று எங்கள் கண்காணிப்பு தெரிவிக்கிறது.. உண்ணிகள் லைம் நோய் உட்பட பல்வேறு நோய்த்தொற்றுகளையும் கொண்டு செல்கின்றன, எனவே உண்ணிகள் உங்களை கடிப்பதற்கான வாய்ப்புகளை குறைக்க நடவடிக்கை எடுக்கவும்..” என்று தெரிவித்தார்..
உண்ணி மூலம் பரவும் வைரஸ் உலகளவில் பல நாடுகளில் பொதுவானது. தலைவலி, கழுத்து விறைப்பு, குழப்பம் அல்லது உணர்வு குறைதல் போன்ற அதிக காய்ச்சல் போன்ற மத்திய நரம்பு மண்டலத்தின் கடுமையான தொற்று ஆகியவை அதன் அறிகுறிகளில் அடங்கும்.
இங்கிலாந்தின் சுகாதார நிறுவனம் வைரஸின் ஆபத்து குறைவாக இருப்பதாகக் கூறினாலும், வைரஸ் அறிகுறியற்ற நிலையில் இருப்பதால், முன்கூட்டியே பரிசோதனை செய்வது பயனுள்ளதாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது. மக்கள் வெளியில் சென்ற பிறகு தங்கள் உடைகள் மற்றும் உடலை உண்ணி உள்ளதா என்று தவறாமல் பரிசோதிக்க வேண்டும் என்று சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.