ஐபிஎல் 2025 தொடரின் சிஎஸ்கே – மும்பை அணிகளுக்கான போட்டி மார்ச் 23ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ள நிலையில், இப்போட்டிக்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனை மார்ச் 19ஆம் தேதி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மார்ச் 22ஆம் தேதி கொல்கத்தாவில் தொடங்குகிறது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா அணியும் பெங்களூரு ராயம் சேலஞ்சர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதையடுத்து, மார்ச் 23ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே – மும்பை அணிகளுக்கான போட்டி நடைபெறவுள்ளது.
இந்தப் போட்டிக்கான டிக்கெட் மார்ச் 19ஆம் தேதி காலை 10.15 மணிக்கு www.chennaisuperkings.com என்ற இணையதளத்தில் விற்பனை தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. டிக்கெட்டின் விலை ரூ. 1,700 முதல் ரூ. 7,500 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, சென்னை மெட்ரோ ரயிலில் இந்தப் போட்டிக்கான டிக்கெட்டை காண்பித்து இலவசமாக பயணிக்கலாம் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகமும் அறிவித்துள்ளது.
மேலும், சிஎஸ்கே – மும்பை அணிகளுக்கான போட்டி மார்ச் 23ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், ரசிகர்களுக்கு முக்கிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதாவது, மைதானத்திற்குள் பிளாஸ்டிக் பொருட்களை எடுத்து வரக்கூடாது. கார், இருசக்கர வாகனங்களை நிறுத்துவோர் போட்டி தொடங்குவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பே மைதானத்திற்கு வர வேண்டும் என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
Read More : EX காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தனுக்கு ICU-வில் தீவிர சிகிச்சை..!! கவலைக்கிடம்..!! சோகத்தில் மகள் தமிழிசை..!!