fbpx

ஏடிஎம் இயந்திரத்தையே ஏமாற்றிய டைல்ஸ் கடைக்காரர்..!! வங்கி ஊழியர்கள் ஷாக்..!! உடனே விரைந்த போலீஸ்..!! பரபர சம்பவம்..!!

தேனி மாவட்டம் போடி அருகே உள்ளது கிருஷ்ணா நகர் என்ற பகுதி. இங்கு தனியார் வங்கி ஒன்று செயல்பட்டு வருகிறது.. இந்த வங்கியின் வாசலிலேயே ஏடிஎம் இயந்திரமும் இருக்கிறது. அதில் பணத்தைச் செலுத்தவும், பணம் எடுக்கவும் தனித்தனியே இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. சம்பவத்தன்று மாலை, வங்கித்தரப்பினர் ஏடிஎம் மிஷினில் இருந்து பணத்தை எடுக்க வந்துள்ளனர்.. அப்போதுதான், 500 ரூபாய் தாள்களில் 8 கள்ளநோட்டுகள் இயந்திரத்தில் வைக்கப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ந்து போனார்கள்.. அதில் 4000 ரூபாய் கள்ள நோட்டு இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது…

இதையடுத்து, சம்பந்தப்பட்ட தனியார் வங்கியின் நோடல் அலுவலர், உடனடியாக இதுகுறித்து போடி தாலுகா போலீசுக்கு புகார் தந்தார்.. போலீசாரும் விரைந்து வந்து, சம்பந்தப்பட்ட வங்கியின் சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து பார்த்தனர்.. அதில், வங்கியில் கள்ளநோட்டுகளை ஏடிஎம் வழியே டெபாசிட் செய்தது, கோகுல் என்பவர் என்பது தெரியவந்தது.. இவர், தேவாரம் மெயின் ரோட்டில், டைல்ஸ் கடை வைத்து நடத்தி வருகிறார் என்று போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து கோகுல் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையை துவங்கி உள்ளனர்.. கோகுலுக்கு எப்படி கள்ள நோட்டுகள் கிடைத்தன? கள்ளநோட்டு கும்பலோடு அவருக்கு நேரடி தொடர்பு உள்ளதா? அல்லது அவருக்கே தெரியாமல் தான் டெபாசிட் செய்தாரா? என்பது குறித்தெல்லாம் விசாரணை நடைபெற்று வருகிறது. இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Chella

Next Post

கரூர் அருகே தோப்பு வீட்டில் தனியாக வசித்து வந்த கணவன் மனைவி கல்லால் அடித்துக்கொலை…..! காவல்துறை விசாரணை…..!

Tue May 23 , 2023
கரூர் மாவட்டம் வாங்கல் அடுத்துள்ள ஓடையூர் பகுதியில் இருக்கின்ற சரவணன் என்பவருக்கு சொந்தமான மாந்தோப்பில் கடந்த 15 ஆண்டுகளாக தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து கணவன், மனைவியான தங்கவேல்(65), தைலி (61) உள்ளிட்ட இருவரும் விவசாயம் செய்து வந்ததாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில், நேற்று காலை தோட்டத்து வீட்டில் தம்பதிகள் இருவரும் சடலமாக மீட்க பட்டு இருக்கிறார்கள். அவர்களுடைய தலை மற்றும் உடல் பகுதியில் பலத்த காயம் ,ஏற்ப்பட்டுள்ளதால் அவர்களை கல்லை […]

You May Like