fbpx

குட் நியூஸ்…! குரூப் 1 தேர்வுக்கான கட்டணம் செலுத்த செப்‌.15 வரை கால அவகாசம்…!;

குரூப் 1 தேர்வுக்கான கட்டணம் ரூ.200-ஐ செப்.15-ம் தேதிக்குள் ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

இது குறித்து டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்; குரூப்-1 மெயின் தேர்வுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள தேர்வர்கள், அனைத்து அசல் சான்றிதழ்களையும் ஸ்கேன் செய்து செப்.16-ம் தேதிக்குள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டும். முதல்நிலைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும்போது கட்டண விலக்கு கோராத விண்ணப்பதாரர்கள் முதன்மைத் தேர்வுக்கான கட்டணம் ரூ.200-ஐ செப்.15-ம் தேதிக்குள் ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

தேர்வுக் கட்டணத்தை செலுத்த வேண்டிய விண்ணப்பதாரர்கள் அக்கட்டணத்தை செலுத்திய பின்னரே தங்களின் சான்றிதழ்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய முடியும். நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யாவிட்டால், அத்தகைய விண்ணப்பதாரருக்கு மெயின் தேர்வெழுத விருப்பமில்லை எனக் கருதி அவர்களின் விண்ணப்பம் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

English Summary

Time to pay group 1 exam fee till Sep 15..

Vignesh

Next Post

அதிர்ச்சி!. ஐரோப்பா முழுவதும் வேகமெடுத்த பரவல்!. புதிய கோவிட் துணை மாறுபாடு XEC, பெரும் அதிகரிப்புக்கு வழிவகுக்கும்!.

Sun Sep 8 , 2024
New Covid Subvariant Could Lead To Major Increase In Cases, Report Reveals

You May Like