தான் 2027ஆம் ஆண்டில் சிக்கிக்கொண்டதாக ஒருவர் கூறியுள்ள தகவல் அனைவரது கவனத்தையும் பெற்றுள்ளது.
2021ஆம் ஆண்டில் அதிக கவனம் பெற்றவர் சேவியர். இவர், கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் எதிர்காலத்தை அடைந்துவிட்டதாகவும், தற்போது அங்கு தனியாக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். மேலும், 2027ஆம் ஆண்டில் அவர் ஒருவரை தவிர உலகில் வேறு யாரும் இல்லை எனக் கூறி, ஆதாரமாக சில புகைப்படங்களை பகிர்ந்திருந்தார்.
அதில், பிரபலமான இடங்களைப் பார்வையிடச் செல்கிறார். எப்போதும் நிறைய கூட்டம் இருக்கும் சுற்றுலாத் தலங்களில் ஒருவரைக் கூட காண முடியவில்லை. மேலும், சில வீடியோக்களில் லண்டன் தெருக்களில் அவர் நடந்து செல்வதை காண முடிகிறது. ஆனால், அங்கும் எவருமே இல்லை. தற்போது, அந்த வீடியோ மீண்டும் வைரலாகி வருகிறது.
இந்த தகவல் நெட்டிசன்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டைம் ட்ராவல் சாத்தியமா என்பது கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது. ஆனால், இவை அனைத்தும் உண்மை என்பதற்கு எந்த உறுதியான ஆதாரமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வீடியோவை காண: https://www.instagram.com/p/CRxtzOqJUlJ/?utm_source=ig_web_copy_link