பயணம் என்றாலே அனைவருக்கும் பிடித்த ஒன்று தான். ஆனால், ஒரு சிலருக்கு பயணம் என்பது பயத்தை தான் ஏற்படுத்தும். ஆம், இதற்க்கு முக்கிய காரணம் அவர்களுக்கு பயணத்தின் போது வாந்தி ஏற்படும். வாந்தி வந்து விடுமோ என்ற பயத்தில், பயணம் செய்ய பிடித்தால் கூட அவர்கள் தவிர்த்து விடுவார்கள். ஆனால் நீங்கள், இது குறித்து கவலை பட வேண்டிய அவசியமே இல்லை.
இப்படி பயணத்தின் போது வாந்தி வராமல் இருக்க என்ன செய்யலாம் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்துக்கொள்ளுங்கள். பயணம் செய்யும் முன்பு, நீங்கள் செய்ய வேண்டிய முதல் காரியம் அதிக மசாலா, எண்ணெய் கலந்த காரமான உணவுகளை தவிர்ப்பது தான். ஆம், இது கேட்பதற்கு சாதரணமாக இருக்கலாம், ஆனால் பயணத்தின் போது இது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
இதனால், முடிந்த வரை பயணத்திற்கு முன்பு எளிதில் ஜீரணம் ஆகக்கூடிய உணவுகளை சாப்பிடுவது தான் நல்லது. பின்பு, நீங்கள் கவனிக்க வேண்டியது என்னெவென்றால், நீங்கள் உடலை நேராக வைத்து அமர வேண்டும். அதாவது, நாம் பயணம் செய்யும் வாகனம் எந்த திசையில் போகிறதோ? அந்த திசையை நோக்கி அமர வேண்டும். எதிர் திசையில் அமரக்கூடாது. இதனால் வாந்தி ஏற்படும்.
பின்பு, முகத்தில் வெளிக் காற்று படும்படி அமர வேண்டும். ஜன்னல்கள் மூடி, வெளிக்காற்று உள்ளே வரவில்லை என்றால், கட்டாயம் வாந்தி ஏற்படும். மிக முக்கியமாக, செல்போன் பார்ப்பது, புத்தகம் படிப்பது போன்று ஒரே இடத்தில கூர்மையாக பார்க்கும் செயல்கள் வாந்தி உணர்வை அதிகப்படுத்தும். இதனால் இது போன்ற செயல்களை தவிர்த்து விடுங்கள்.
ஒரு சிலர், பயணத்தின் போது வாந்தி வராமல் இருக்க, மாத்திரைகள் சாப்பிடுவது உண்டு. ஆனால் அதற்க்கு பதில், நீங்கள் இஞ்சி மற்றும் எலுமிச்சை சாறு சாப்பிடுவது நல்லது. இதனால் வாந்தி உணர்வை சுலபமாக கட்டுப்படுத்தலாம். சரியாக தண்ணீர் குடிக்காமல் உடல் டீஹைட்ரேட்டாக இருந்தாலும் வாந்தி உணர்வு அதிகமாகும். இதனால் சிறிது தண்ணீரை குடித்து உடலை நீரேற்றமாக வைத்துக்கொள்ளுங்கள்.
நல்ல வாசனை மிக்க பொருட்களை நம்மிடம் வைத்துக் கொள்வதால், வாந்தி உணர்வை குறைக்க முடியும். இதற்காக அதிக வாசனை உள்ள சென்ட் பயன்படுத்த கூடாது. நறுமணம் நிறைந்த நல்ல பூக்கள், புதினா எண்ணெய், லாவண்டர் எண்ணெய் போன்றவை வாந்தி வராமல் தடுக்கும்.
முடிந்த வரை, அருகில் இருப்பவருடன் உரையாடுவது அல்லது பாடல் கேட்பது போன்ற செயல்களில் ஈடுபடுவது சிறந்தது. இப்படி கவனத்தை திசை திருப்புவதால் வாந்தி உணர்வை கட்டுப்படுத்தலாம்.