fbpx

குழந்தைகளின் தண்ணீர் பாட்டிலை சுத்தம் செய்யாவிட்டால் வரும் ஆபத்து!!! எப்படி சுத்தம் செய்ய வேண்டும்??

பொதுவாக, நாம் வீட்டில் உள்ள அணைத்து பொருள்களையும் அடிக்கடி துடைத்து சுத்தமாக வைப்போம். ஆனால், பல நேரங்களில் நாம் அடிக்கடி பயன்படுத்தும் தண்ணீர் பாட்டில்களை சுத்தம் செய்ய மறந்து விடுகிறோம். அப்படி ரொம்ப நாளாக கழுவாமல் பயன்படுத்தி வரும் பாட்டிலில் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களின் இனப்பெருக்கம் செய்து, நாம் நினைத்திடாத அளவிற்கு பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும். அது மட்டும் இல்லாமல், பாட்டில்களில் கடுமையான துர்நாற்றம் வீசும். மேலும், அமெரிக்காவை சேர்ந்த ஆராய்ச்சி நிறுவனம் ஒன்று நடத்திய ஆய்வில், நமது டாய்லெட் சீட்டில் இருப்பதைவிட 40 ஆயிரம் மடங்கு அதிக பாக்டீரியாக்கள் தண்ணீர் பாட்டில்களில் இருப்பதற்கான அபாயம் உள்ளதாக தெரிவித்தனர்.

பலர், பாட்டிலை சுத்தம் செய்வது கடினம் என்று கழுவாமல் விட்டுவிடுவது உண்டு. இனி அந்த தவறை செய்யாதீர்கள். பாட்டிலை எப்படி சுலபமாக சுத்தம் செய்வது என்பது பற்றி பார்ப்போம்… முதலில், நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது, பிளாஸ்டிக் பாட்டில்களை சூடான நீரைப் பயன்படுத்தி சுத்தம் செய்ய கூடாது. அதற்கு பதிலாக, வெதுவெதுப்பான நீரை பயன்படுத்தலாம். மேலும், 5 முதல் 6 மாதங்களுக்கு ஒருமுறை தண்ணீர் பாட்டில்களை மாற்றுவது நல்லது. வாரத்திற்கு ஒரு முறையாவது பாட்டில்களை நன்றாக கழுவி சூரிய ஒளியில் படுமாறு வைப்பது நல்லது.

வினிகர்: சமையலறை மூலப்பொருளான வினிகர், பாட்டில்களை சுத்தம் செய்வதற்கு மிகவும் உதவியாக இருக்கும். ஆம், வெந்நீரில் வினிகரை கலந்து பாட்டிலில் ஊற்றி 5 முதல் 10 நிமிடங்கள் ஊற வைத்துவிடுங்கள். பின்னர் பாட்டிலை நன்கு குலுக்கி, வழக்கம் போல் கழுவி காய வையுங்கள். இப்படி செய்வதால் பாட்டிலில் வரும் துர்நாற்றம் நீங்கும்.

எலுமிச்சை: வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறை கலந்து, அவற்றை பாட்டிலில் ஊற்றி ஊற வைத்துவிடுங்கள். பின்னர், அந்த எலுமிச்சைத் தோலில் சிறிது உப்பைத் தூவி, பாட்டிலின் வாய் பகுதியை நன்கு சுத்தம் செய்யுங்கள். இதனால் பாட்டிலில் வளரும் கிருமிகள் அழிந்துவிடும்.

டிஷ் சோப்பு: சிறிய அளவு சோப்பை தண்ணீரில் கலந்து, பாட்டிலில் ஊற்றி, நன்கு குலுக்கவும். இதனால் பாட்டிலின் உட்புறம் சுத்தமாகிவிடும். பின்னர் வெளிப்புறத்திலும் சிறிது சோப்பு தேய்த்து, எப்போதும் போல தண்ணீர் ஊற்றி நன்கு கழுவி காய வைத்து விடுங்கள்.

Maha

Next Post

நாளை முதல் ரூ.2,000 நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம்...! எங்கு தெரியுமா...? ஆர்.பி.ஐ கவர்னர் முக்கிய அறிவிப்பு...!

Sat Oct 7 , 2023
ரூ.12,000 கோடி மதிப்பிலான ரூ.2,000 நோட்டுகள் இன்னும் திரும்பப் பெறப்படவில்லை என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். ரூ.2,000 நோட்டுகளை மாற்றுவதற்கான கால அவகாசம் செப்டம்பர் 30 முடிந்த நிலையில், அக்டோபர் 7-ம் தேதி வரை காலஅவகாசம் நீட்டிக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி கடந்த வாரம் அறிவித்தது. கால அவகாசம் இன்றுடன் முடிவடையுள்ள நிலையில் ரூபாய் நோட்டுகளை வைத்திருக்கும் நபர்கள் வங்கி கிளைகளுக்கு சென்று மாற்றிக் கொள்ள வேண்டும். […]

You May Like