குளிர் காலம் வந்தாலே, பாத வெடிப்புகள் நம்மை பாடாய் படுத்தி விடும். இதற்க்கு நாம் என்ன தான் செய்தாலும், நிரந்தர தீர்வே இல்லாமல் பலர் அவதிப்படுவது உண்டு. சிலர் விளம்பரங்களை நம்பி பல கிரீம்களை வாங்கி பயன்படுத்துவது உண்டு. ஆனால் உங்கள் பாத வெடிப்பை, பார்லருக்கும் போகாமல் மருத்துவரிடமும் போகாமல் வீட்டிலேயே சுலபமாக சரி செய்துவிடலாம்.. ஆம், கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளின் படி செய்தால், ஒரே இரவில் உங்கள் பாதங்கள் மிகவும் மென்மையாகும்.
இதற்க்கு முதலில், ஒரு கிண்ணத்தை எடுத்து அதில் 2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய், 1 ஸ்பூன் கிளிசரின் மற்றும் ஒரு வைட்டமின் ஈ கேப்ஸ்யூல் சேர்த்து நன்கு கலக்கிவிடுங்கள். அவ்வளவு தான். பெரிய செலவே இல்லாமல், உங்கள் பாதங்களை மென்மையாக்கும் கிரீம் தயார்.. இப்போது இந்த கிரீமை பயன்படுத்துவதற்கு முன், ஒரு சில விஷயங்களை நாம் செய்ய வேண்டும்.
இதற்க்கு முதலில், வெதுவெதுப்பான நீரில், உங்கள் பாதங்களை 10 நிமிடங்கள் ஊற வைக்கவும். பிறகு, உங்கள் பாதங்களை தண்ணீரிலிருந்து வெளியே எடுத்து, ஈரம் இல்லாமல் நன்கு துடைக்கவும். இப்போது நீங்கள் தயாரித்து வைத்துள்ள கிரீமை உங்கள் பாதங்களில் தடவி, காட்டன் சாக்ஸ் அணிந்து தூங்குங்கள். மறுநாள் காலையில் உங்களுக்கே வித்தியாசம் தெரியும். உங்கள் பாதங்கள் மென்மையாக மாறியிருப்பதைக் ஒரே இரவில் உங்களால் உணர முடியும்.