fbpx

உங்க புது ட்ரெஸ் சீக்கிரமா வெளுத்து போகுதா?? அப்போ இனி இதை மட்டும் செஞ்சு பாருங்க..

பொதுவாக நாம் அதிக விலை கொடுத்து, விரும்பி வாங்கிய உடை, ஒரு முறை பயன்படுத்திய பிறகே வெளுத்து போய், பழசு போல் இருக்கும் அனுபவம் பலருக்கு இருக்கும். இந்த உடைக்கா இத்தனை செலவு செய்தோம் என்று நாம் கண்டிப்பாக யோசித்து இருப்போம். அது என்ன மாயமோ தெரியாது, ஆனால் விலை குறைந்த துணிகளை விட சற்று விலை உயர்ந்த துணிகள் தான் சீக்கிரம் வெளுத்து போய் விடும். இனி கவலையே வேண்டாம். உடைகள் சீக்கிரம் நிறம் மாறாமல் தடுப்பது எப்படி என்பதை பற்றி தெரிந்துக்கொள்ளுங்கள்..

  1. எப்போதும் துணிகளை துவைக்கும் போது, உரிய அளவில் தண்ணீர் மற்றும் சோப்பை பயன்படுத்த வேண்டும். ஒரு வேலை நீங்கள் அளவிற்கு அதிகமான சோப்பு போட்டு துணி துவைத்தால் கட்டாயம் துணிகள் வெளுத்துவிடும்.
  2. துணிகளை காய வைக்கும் போது, நேரடியான சூரிய ஒளியில் காய வைக்க கூடாது. ஏனென்றால், அதிகமான வெப்பம் ஆடைகளின் பொலிவை குறைத்து, வண்ணத்தையும் பாதித்து விடும்.
  3. பொதுவாக ஒரு புதிய ஆடை வாங்கும்போது அதன் பின், பராமரிப்பு குறிப்புகள் கொடுக்கபட்டிருக்கும். அதனை நன்கு படித்துப் பார்த்து, அதன் படி துணிகளை பராமரிப்பது நல்லது.
  4. துணிகளை துவைக்கும் போது, சோப்பு நீரில் அதிக நேரம் ஊற வைக்கக் கூடாது. மேலும், அழுக்கான அல்லது ஏற்கனவே பயன்படுத்திய நீரில் துணிகளை அலசவே கூடாது.
  5. பொதுவாக, ஆடைகளை துவைப்பதற்கு முன்பு, அதில் இருக்கும் விடாப்படியான கறைகளை முதலில் அலசிவிட்டு, பிறகு தான் துணியை ஊற வைக்க வேண்டும்.
  6. ஒரு போதும், உங்கள் பழைய துணிகளுடன் புதிய துணிகளை சேர்த்து துவைக்க கூடாது.
  7. உங்கள் துணிகளுடன் குழந்தைகளின் துணிகளையும் சேர்த்து துவைக்க கூடாது.

இந்த குறிப்புகளை எல்லாம் நீங்கள் நினைவில் வைத்துக்கொண்டு துணி துவைத்தால், கட்டாயம் உங்கள் துணிகள் நீண்ட காலம் நிறம் புதுசு போலவே இருக்கும்.

Read more: மாலை நேரத்தில் நடைப்பயிற்சி செய்தால் உடல் எடை குறையுமா?? கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்…

English Summary

tips-to-prevent-new-dress-from-getting-old

Next Post

உங்க வீட்டு பெண் பிள்ளைகளுக்கு பிசிஓடி, பிசிஓஎஸ் பிரச்சனை இருக்கா? அப்போ உடனே இதை செய்யுங்க..

Sun Dec 8 , 2024
remedy-for-pcod-and-pcos

You May Like