கார்த்திகை மார்கழி மாதங்களில் வீடுகளில் அகல் விளக்குகள் அதிகம் பயன்படுத்தப்படும். இதனால் விளக்குகளில் எண்ணெய் கறைகள் படிந்து விடும். அதனை கை வலிக்க சோப்பு போட்டு கழுவுவதற்கு பதில் சுலபமாக கழுவ சிறந்த 3 வழிமுறைகளை இந்த பதிவில் பார்க்கலாம்.
முறை 1 : வினிகர் மற்றும் டிடர்ஜென்ட் பவுடரை சம அளவு எடுத்து கலக்கி கொள்ள வேண்டும். இதனை ஒரு பிரஷ் கொண்டு விளக்குகள் மீது தேய்க்க வேண்டும். சிறிது நேரம் ஊற விட்டு பின்னர் தண்ணீரில் கழுவி காய்ந்த துணியில் துடைத்தால் எண்ணெய் பசை, அழுக்கு நீங்குவதை காணலாம்.
முறை 2 : ஒரு கரண்டி உப்புடன் 3 கரண்டி வினிகரை சேர்ந்து அதனை விளக்கின் அனைத்து இடங்களிலும் படும்படி தடவி 1 மணி நேரம் ஊற வைத்து கழுவினால் எண்ணெய் பசை நீங்குவதை காணலாம்.
முறை 3 : ஒரு பாத்திரத்தில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். அதோடு 2 ஸ்பூன் பேக்கிங் சோடா, 2 ஸ்பூன் டிடர்ஜென்ட் மற்றும் எலுமிச்ச்சை சாறு விட்டு கொதிக்க விட வேண்டும். நன்றாக கொதித்தும் அடுப்பை அணைத்து விட்டு விளக்குகளை இந்த நீரில் போட வேண்டும். 5 நிமிடத்திற்கு பிறகு எடுத்து கழுவினால் அழுக்கு மற்றும் எண்ணெய் பிசுக்குகள் நீங்குவதை காணலாம்.
Read more: மூட்டுவலி, கால்வலி எல்லாம் காணாமல் போகும்.. இந்த ஊத்தாப்பம் சாப்பிட்டு பாருங்க..!