திருநெல்வேலி மாவட்ட கண்காணிப்பு பிரிவில் உள்ள இளம் தொழில்முறை பணியிடங்களை நிரப்புவதற்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த காலிப்பணியிடத்திற்குத் தேர்வு செய்யப்படும் நபருக்கு மாத ஊதியமாக ரூ.50,000/ வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித் தகுதி: இந்த பதவிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் சிஎஸ்/ஐடியில் இளங்கலை பொறியியல் (அல்லது) தரவு அறிவியல் மற்றும் புள்ளியியல் துறையில் இளங்கலைப் பட்டம். (அல்லது) கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம், தரவு அறிவியல், புள்ளியியல் அல்லது தொடர்புடைய படிப்பில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
மேலும், வலுவான ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு திறன்கள் இருக்க வேண்டும். தரவு பகுப்பாய்வு கருவிகள் எக்செல், SPSS, R அல்லது அது போன்ற) & Microsoft Office தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், முன் அனுபவம் இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செயல்முறை: குறுகிய பட்டியல் மற்றும் நேர்காணல் மூலம் ஆட்சேர்ப்பு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பக் கட்டணம் எதுவும் செலுத்தத் தேவையில்லை.
ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் https://tirunelveli.nic.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் PDF வடிவில் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம், தேவையான அனைத்து ஆவணங்களுடன் பிப்ரவரி 2ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
முகவரி : மாவட்ட ஆட்சியர் அலுவலகம், திருநெல்வேலி என்ற முகவரிக்கு 02.02.2025 அன்று அல்லது அதற்கு முன் அனுப்ப வேண்டும்.
Read more : நல்லிரவில் பெண்களை துரத்திய இளைஞர்கள்.. குற்றம் செய்ய திமுக கொடி லைசன்சா? – எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்