fbpx

நெல்லை அரசு மருத்துவமனையில் வேலை.. ரூ.60 ஆயிரம் சம்பளம்.. செம சான்ஸ்! விட்றாதீங்க..

திருநெல்வேலி மாவட்டநலவாழ்வு சங்கம் மூலமாக திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனை, அரசு சித்த மருத்துவ பிரிவு, திருநெல்வேலி மாநகராட்சி மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் தேசிய ஊரக நலத்திட்டத்தின் கீழ் காலியாகவுள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தற்காலிகமாக 11 மாத கால ஒப்பந்த அடிப்படையில் இப்பணிகள் நிரப்பப்பட உள்ளன.

Medical Officer 4,Hospital Quality Manager 1 பணியிடங்கள்அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு 1.11.2024 அன்று 35 வயதிற்கு கீழே இருக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ கல்லூரிகளில் எம்பிபிஎஸ் படித்திருக்க வேண்டும். இதற்கு 60 ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது. Microbiologist ஒரு பணியிடத்திற்கு MBBS.MD (Microbiology) முடித்திருக்க வேண்டும். மாதம் ரூ. 40000 சம்பளம் வழங்கப்படுகிறது.

Dental Surgeon 4 பணியிடத்திற்கு BDS படிப்பு முடித்திருக்க வேண்டும். மாதம் 34 ஆயிரம் சம்பளம் வழங்கப்படுகிறது. Social 1 பணியிடத்திற்கு Sociology (Social Work Medical Psychiatry) படிப்பு முடித்திருக்க வேண்டும். மாதம் ரூ. 23,800 வழங்கப்படுகிறது. IT ordinator 1 பணியிடத்திற்கு BE பட்டம் முடித்திருக்க வேண்டும். மாதம் ரூ. 21000 சம்பளம் வழங்கப்படுகிறது. இதற்கும் 1.11.2024 அன்று 35 வயதிற்கு கீழே இருக்க வேண்டும்

விண்ணப்பிப்பது எப்படி..? விண்ணப்பங்களை https://tirunelveli.nic.in என்ற இணையதளத்தில் கல்வித் தகுதி மற்றும் இதர சான்றிதழ்களுடன் 31.12.2024 அன்றுமாலை 5.00 மணிக்குள் பதிவேற்றம் செய்யப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும். நேரிலோ அல்லது தபால் மற்றும் மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. 

Read more ; பன்றிகளை போலவே பூனைகளும் ஆபத்தானவை; அடுத்த பெருந்தொற்றை உருவாக்கலாம்.. எச்சரிக்கும் புதிய ஆய்வு..

English Summary

Tirunelveli Government Hospitals has published a job offer on contract basis with a salary of 60 thousand per month.

Next Post

பரபரப்பு.. நாடாளுமன்றத்தில் பயங்கர மோதல்.. பாஜக MP-கள் மண்டை உடைப்பு..!! என்ன நடந்தது..?

Thu Dec 19 , 2024
MP Hurt In Big Chaos Over Ambedkar Protests, BJP Considers Police Complaint Against Rahul Gandhi

You May Like