திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினம் தோறும் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வரும் நிலையில் இரண்டு முறை பிரம்மோற்சவ விழா நடைபெற உள்ளது. அதனால் பக்தர்களின் வசதிக்காக வருகின்ற செப்டம்பர் 17ஆம் தேதி முதல் செப்டம்பர் 30ம் தேதி வரை திருப்பதிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
இந்த வருடம் திருப்பதி திருமலையில் இரண்டு முறை பிரம்மோற்சவ விழா நடைபெற உள்ளதால் பக்தர்களின் வசதிக்காக சென்னை திருச்சி தஞ்சாவூர் சேலம் கோயம்புத்தூர் மதுரை காரைக்குடி கும்பகோணம் மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களில் இருந்து திருப்பதிக்கு முதலில் வரும் திருவிழாவிற்காக வருகின்ற செப்டம்பர் 17 முதல் செப்டம்பர் 30-ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாகவும் இந்த பேருந்துகளில் www.tnstc.in என்ற இணையதளம் அல்லது டிஎன்எஸ்டிசி செயலி மூலம் முன்பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.