திருப்பதி தேவஸ்தனத்தில் வேலை வாங்கித் தருவதாக இளைஞர்களிடம் ரூ.1.20 கோடி பணம் மோசடி செய்த ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பதி தேவஸ்தனத்தில் வேலை பார்த்து வருபவர் பாலகிருஷ்ணா . இவர் தான் பணியாற்றும் இடத்தில் உயரதிகாரிகளிடம் பேசி வேலை வாங்கித் தருவதாக பலரிடம் பணம் பறித்துள்ளார். வேலை வரும் என்று பல நாள் காத்திருந்தும் வேலை கிடைக்கவில்லை. பாலகிருஷ்ணனிடம் பணம் கொடுத்த இளைஞர்கள் சென்று பாலகிருஷ்ணனிடம் கேட்டபோது எப்பொழும் ஏதாவது கதை சொல்லி தப்பித்துக் கொண்டிருந்தார். இந்நிலையில் பணத்தை ஏமாந்த இளைஞர்கள் காவல் நிலையத்தை நாடினார்கள்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர். வேலையில்லா திண்டாட்டத்தை பயன்படுத்தி வேலை தருவதாக கூறி பணம் மோசடி செய்வது அதிகரித்து வருகின்றது. இந்த சூழ்நிலையை பயன்படுத்திக் கொண்ட பாலகிருஷ்ணா இளைஞர்களிடம் ரூ.1.20 கோடி வரை பணம் பறித்துள்ளார். தொடர்ந்து இவரிடம் விசாரணை நடைபெற்று வருகின்றது.