fbpx

திருப்பதியில் பிரம்மோற்சவம், 13 நாட்களுக்கு, தமிழகத்தில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்….!

திருப்பதியில் பிரமோற்சவம் நடைபெற இருப்பதை முன்னிட்டு, இன்று முதல், தமிழ்நாட்டில் இருந்து திருப்பதிக்கு, சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இந்த பிரமோற்சவ திருவிழாவை முன்னிட்டு, பக்தர்களின் சிரமங்களை போக்கும் விதத்தில், சென்னை,தஞ்சை,திருச்சி,கோவை, மதுரை,காரைக்குடி,கும்பகோணம்,புதுவை போன்ற பகுதிகளில் இருந்து, ஆந்திர மாநிலம் திருப்பதிக்கு, இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது குறித்து, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மூலமாக சிறப்பு பேருந்துகள் இயக்குவது தொடர்பாக, மேலாண் இயக்குனர் வெளியிட்டிருக்கின்ற தகவலில், 2023 ஆம் ஆண்டு திருப்பதி திருமலையில், இரண்டு முறை பிரமோற்சவ திருவிழா நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக, 2023 ஆம் ஆண்டு திருப்பதி திருமலையில் இரண்டாவது முறையாக நடைபெற இருக்கின்ற பிரமோற்சவ திருவிழாவையொட்டி, பக்தர்கள் வசதிக்காக, அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பாக, சென்னை,தஞ்சை,திருச்சி,சேலம்,கோவை,காரைக்குடி,மதுரை,கும்பகணம்,புதுவை போன்ற பகுதிகளில் இருந்து, திருப்பதிக்கு இன்று முதல், வரும் 26 ஆம் தேதி வரையில், சிறப்பு பேருந்துகள் இயக்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலே சொல்லப்பட்டுள்ள இடங்களில் இருந்து இயக்கப்படும் பேருந்துகளுக்கு, முன்பதிவு செய்யும் வசதியும் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த சேவையை பக்தர்கள் முழுமையாக பயன்படுத்தி, பயணம் செய்யwww.tnstc.in மூலமாக முன்பதிவு செய்து, பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று அவர் கூறியுள்ளார்.

Next Post

தமிழ்நாடு ரேஷன் கடைகளில்..!! இன்று முதல் வந்த புதிய மாற்றம்..!! மக்களே கண்டிப்பா யூஸ் ஆகும்..!!

Fri Oct 13 , 2023
தமிழ்நாடு ரேஷன் கடைகளில் இன்று முதல் பேடிஎம் வழியாக பணம் செலுத்தும் நடைமுறை அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பல்வேறு துறை சேவைகள் டிஜிட்டல் மயமாகி வருகிறது. பல துறைகளில் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் நடைமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளன. ஒரு காலத்தில் ரேஷனில் பொருட்களை வாங்குவதற்கு வெறும் அட்டையை வைத்துக்கொண்டு லைனில் இருந்த காலம் எல்லாம் சென்றுவிட்டது. இப்போது எளிதாக ரேஷனில் பொருட்களை வாங்க முடியும். இந்நிலையில், […]

You May Like