fbpx

குழந்தைகள் நலன் துறையில் வேலைவாய்ப்பு.. நல்ல சம்பளம்.. விண்ணப்பிக்க ரெடியா..?

திருவண்ணாமலை மாவட்டத்தில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் கீழ் செயல்படும் அரசு குழந்தைகள் இல்லத்தில் ஆற்றுப்படுத்துநர் பணியிடங்கள் மதிப்பூதிய அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது.

கல்வித் தகுதி : இந்தப் பதவிக்கு தகுதியான உளவியல் மற்றும் ஆற்றுப்படுத்துதல் ஆகிய கல்வியில் (Master’s degree in the field of Psychology or Counselling) முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் உரிய சான்றின் ஒளி நகலுடன் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது. விண்ணப்பிக்கும் நபர் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும்.

ஊதியம்: தேர்வு செய்யப்படும் ஆற்றுப்படுத்துனர்களுக்கு வருகையின் மதிப்பு புதிய அடிப்படையில் சேவை வழங்க ஒரு வருகைக்கு நாள் ஒன்றுக்கு போக்கு வரத்து செலவு உட்பட ரூ. 1000/- வழங்கபடும். மேலும், விவரம் வேண்டுவோர் சம்பந்தப்பட்ட மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் திருவண்ணாமலை தொடர்பு கொண்டு தெளிவு பெறலாம். 

முகவரி : விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், வட்டாட்சியர் அலுவலக வளாகம், திருவண்ணாமலை pin (606601) தொலைபேசி எண் 04175223030 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி 15.01.2025 ஆகும்.

Read more ; அண்ணா பல்கலைக்கழக விவகாரம்..!! கைதான ஞானசேகரனுக்கு 4 மனைவிகள்..!! சுவர் ஏறி குதித்து வீடியோ..!! விசாரணையில் திடுக்கிடும் தகவல்..!!

English Summary

Tiruvannamalai Government Children’s Home is going to fill up the posts of Comforter on merit basis.

Next Post

காலை எழுந்த உடன் இந்த 5 அறிகுறிகள் இருக்கா..? ஜாக்கிரதையா இருங்க.. சைலண்ட் கில்லராக மாறலாம்..

Thu Dec 26 , 2024
பொதுவாக உயர் ரத்த அழுத்தம், சைலண்ட் கில்லர் என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு குறிப்பிடத்தக்க சுகாதார அபாயத்தை ஏற்படுத்தும். ஆனால் காலை எழுந்த உடன், ரத்த அழுத்த அளவீடுகள் உங்கள் ஒட்டுமொத்த இதய ஆரோக்கியத்தை பற்றி கூறுகிறது. காலை ரத்த அழுத்தத்தின் முக்கியத்துவத்தையும், நீங்கள் புறக்கணிக்கக் கூடாத அமைதியான எச்சரிக்கை அறிகுறிகள் குறித்தும் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.. நமது இரத்த அழுத்தம் இயற்கையாகவே நாள் முழுவதும் மாறுபடுகிறது. இருப்பினும், காலை எழுந்த […]

You May Like