fbpx

’தளபதி 67’ படத்தின் டைட்டில்..!! வீடியோவுடன் வெளியீடு..!! என்ன பெயர் தெரியுமா..?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்திற்கு ‘லியோ’ என பெயரிடப்பட்டுள்ளது.

வாரிசு படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் விஜய் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங், கடந்த மாதம் தொடங்கியது. அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்காக படக்குழுவினர் தனி விமானம் மூலம் காஷ்மீர் சென்றுள்ளனர். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். விஜய் – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் இந்த திரைப்படத்தில் அர்ஜுன், மன்சூர் அலி கான், பிரியா ஆனந்த், கவுதம் மேனன் உள்ளிட்டோர் படத்தில் நடிக்கின்றனர். கத்தி, பீஸ்ட் படங்களை தொடர்ந்து அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். பீஸ்ட் படத்தில் ஒளிப்பதிவு மேற்கொண்ட மனோஜ் பரமஹம்சா இப்படத்தில் இணைந்துள்ளார். 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் சார்பாக எஸ்.எஸ்.லலித்குமார் இந்தப் படத்தை தயாரிக்கிறார்.

இந்நிலையில், இப்படத்திற்கு ’தளபதி 67’ என தற்காலிகமாக பெயரிடப்பட்ட நிலையில், இந்தப் படத்தின் டைட்டில் இன்று மாலை வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. அதன்படி, படத்தின் டைட்டில் புரொமோ வீடியோவுடன் வெளியாகியுள்ளது. இதனை நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Chella

Next Post

நர்சிங் கல்லூரி மாணவி மர்ம மரணம் - விடுதியில் நடந்தது என்ன போலீஸ் விசாரணை.!

Fri Feb 3 , 2023
நர்சிங் கல்லூரி மாணவி விடுதி அறையில் மர்மமாக கிடந்துள்ள சம்பவம் புழல் பகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சென்னையை அடுத்த காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர் சுபஸ்ரீ வயது 20. இவர் சென்னை புழலில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் விடுதியில் தங்கி படித்து வந்தார். இந்நிலையில் நேற்று காலை எல்லா மாணவிகளும் கல்லூரிக்கு சென்ற போது சுபஸ்ரீ கல்லூரிக்கு வரவில்லை. இதனால் விடுதிக்கு வந்த மாணவிகள் அவரது அறையை தட்டி இருக்கின்றனர். நீண்ட நேரமாகியும் அரை கதவு திறக்காததால் ஜன்னல் வழியாக […]

You May Like