fbpx

Lok Sabha 2024 | திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு அதிர்ச்சி.! பாஜக-வில் இணைந்த இரண்டு எம்பிக்கள்.!

மேற்குவங்க மாநிலத்தின் ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியிலிருந்து 2 எம்பிக்கள் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்த நிகழ்வு அங்குள்ள அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மேற்குவங்க மாநிலத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வருகிறது. வர இருக்கின்ற பாராளுமன்ற தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ளது.

எனினும் அந்த கட்சி வர இருக்கின்ற பாராளுமன்ற தேர்தலில் மேற்கு வங்காளத்தில் உள்ள பாராளுமன்ற தொகுதிகளில் கூட்டணியின்றி தனித்து போட்டியிடுகிறது. மேற்குவங்க மாநிலத்தில் உள்ள 42 பாராளுமன்ற தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை சில தினங்களுக்கு முன்பு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெளியிட்டது.

இந்த பட்டியலில் சில புதுமுக வேட்பாளர்களும் இடம் பெற்று இருந்தனர். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான யூசுப் பதான் பஹரம்பூர் தொகுதியில் வேட்பாளராக அறிமுகப்படுத்தப்பட்டார். இந்நிலையில் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதால் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் அந்தக் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் சேர்ந்துள்ளனர்.

திரிணாமுல் காங்கிரஸ் காங்கிரஸ் கட்சியில் மக்களவை உறுப்பினர்களாக பதவி வகித்து வரும் அர்ஜுன் சிங் மற்றும் திபேந்து அதிகாரி ஆகியோர் தற்போது நடைபெற இருக்கும் மக்களவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காததால் பாஜகவில் இணைந்துள்ளனர். இவர்களில் திபேந்து அதிகாரி தற்போதைய மேற்கு வங்கிய சட்டமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் சுபேந்து அதிகாரியின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More: Arabbie | அண்ணாமலை நடித்த படத்தின் ட்ரெய்லர் வெளியீடு..!! ஒரே நாள் ஷூட்டிங்கில் இத்தனையும் செய்தாரா..?

Next Post

இன்றோடு முடிவடையும் Paytm FASTag: ஃபாஸ்டேக் கணக்கை எளிய முறையில் மூடுவதற்கான வழிமுறைகள்.!

Fri Mar 15 , 2024
அனைத்து பேடிஎம் ஃபாஸ்டேக் பயனர்களும் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட புதிய பேமெண்ட் வழங்குனருக்கு மாறுமாறு இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) அறிவுறுத்தியுள்ளது. இந்தப் பதிவில் உங்களது பழைய பேடிஎம் ஃபாஸ்டேகை எவ்வாறு நிறைவு செய்வது என்பதை தெரிந்து கொள்ளலாம். ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியாவின் வழிகாட்டுதலின்படி பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கியின் சேவைகள் இன்று நல்லிரவோடு முடிவுக்கு வருகிறது. இதனால் பேடிஎம் ஃபாஸ்டேக் பயனாளர்கள் தங்களது கணக்கை புதிதாக […]

You May Like