தமிழ்நாட்டின் பொது பட்ஜெட், சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இன்று காலை 9.30 மணியளவில் அமைச்சர் எம்.ஆர். பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.
வேளாண் பட்ஜெட் முக்கிய அறிவிப்புகள்
முதலமைச்சர் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதி உயர்த்தி வழங்கப்படும்.
டெல்டா அல்லாத மாவட்டங்களில் பயிர் சாகுபடியை அதிகரிக்க சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படும்.
உழவர்களை தேடி திட்டத்தின் கீழ் மாதம் 2 முறை முகாம் நடத்தப்படும்.
நிலமற்ற வேளாண் தொழிலாளர்களுக்கு விபத்து மரண இழப்பீடு ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்.
இயற்கை மரணத்திற்கான நிதி ரூ.2000-லிருந்து ரூ.3000ஆக உயர்வு.
இறுதிச்சடங்கு நிதியுதவி ரூ.2500-லிருந்து ரூ.10000ஆக உயர்த்தப்படுகிறது.
தமிழ்நாட்டில் உள்ள விவசாயிகளுக்கும் உதவும் முதலமைச்சரின் உழவர் நல சேவை மையங்கள் அமைக்கப்படும். வேளாண் பட்டதாரிகள் மூலம் இந்த மையங்கள் செயல்படும்.
விவசாயிகளுக்கு தரமான விதைகள் வழங்க ரூ. 52 கோடி ஒதுக்கீடு.
பயிர் சாகுபடியை அதிகரிக்க ரூ.102 கோடி ஒதுக்கீடு.
மானாவரி நிலங்களில் 3 லட்சம் நிலங்களில் கோடை உழவு செய்ய, ஹெக்டேருக்கு ரூ.2000 மானியம் வழங்கப்படும்.
மலைவாழ் உழவர்கள் மேம்பாட்டு திட்டத்திற்கு ரூ.22.80 கோடி ஒதுக்கீடு.