2025-26-ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார். விவசாயிகளுக்காக பல்வேறு முக்கிய அறிவிப்புகளை அவர் வெளியிட்டு வருகிறார்.
வேளாண் பட்ஜெட்டின் முக்கிய அறிவிப்புகள் :
தென்னை பயிர் செய்யப்படும் மாவட்டங்களில், பூச்சி தாக்கத்தை கட்டுப்படுத்த ரூ. 4 கோடி ஒதுக்கீடு.
100 முன்னோடி உழவர்களை, நெல் உற்பத்தியில் சாதனை படைத்துள்ள நாடுகளுக்கு அழைத்து செல்ல திட்டம்.
ரூ.15 கோடியில் 7 விதை சுத்திகரிப்பு மையங்கள் அமைக்கப்படும்.
ரூ.12 கோடியில் பருத்தி சாகுபடி திட்டம் செயல்படுத்தப்படும்.
ரூ.841 கோடியில் பயிர் காப்பீட்டு திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
புரதச்சத்து நிறைந்த காளாண் உற்பத்தியை ஊக்குவிக்க 5 காளான் உற்பத்தி மையங்கள் அமைக்கப்படும்.
காய்கறி விலையை கட்டுப்படுத்த, ரூ. 10.5 கோடியில் கோடைகால பயிர்திட்டம் உருவாக்கப்படும்.
வேளாண் துறைக்கு மொத்த நிதியாக ரூ.45,6661 கோடி ஒதுக்கீடு.
உழவர்களுக்கு இலவச மின் இணைப்புகளுக்கான கட்டண தொகை ரூ.8,186 கோடி ஒதுக்கீடு.
80,000 இயற்கை மேலாண்மை பணிகளுக்கு ரூ.2000 கோடி ஒதுக்கீடு.