2025-26-ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று காலை 9.30 மணிக்கு தாக்கல் செய்தார். மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த பட்ஜெட் தாக்கலாகி உள்ளது. அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்யும் 2-வது பட்ஜெட் இதுவாகும். ‘எல்லார்க்கும் எல்லாம்’ என்ற கருப்பொருளில் இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பட்ஜெடை தாக்கல் செய்து உரையாற்றி வரும் தங்கம் தென்னரசு தமிழ்நாடு இந்தியாவிலேயே 2-வது மிகப்பெரிய பொருளாதாரம் கொண்ட மாநிலம் என்று பெருமிதம் தெரிவித்தார்.
தமிழக பட்ஜெட் 2025-26-ன் முக்கிய அம்சங்கள் :
பழந்தமிழ் நூல்களை மின் வடிவில் மாற்ற ரூ.2 கோடி ஒதுக்கீடு.
சென்னை அருகே ஒருங்கிணைந்த புதிய நகரம் 2000 ஏக்கரில் அமைக்கப்படும்.
மகளிர் விடியல் பயணத் திட்டத்திற்கு ரூ.3600 கோடி ஒதுக்கீடு.
பேருந்துகளில் 642 கோடி முறை மகளிர் இலவச பயணம் மேற்கொண்டுள்ளனர்.
வரும் ஆண்டுகளில் சுய உதவி குழுக்களுக்கு ரூ.37000 கோடி கடன்கள் வழங்கப்படும்.
மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கு ரூ.13,807 கோடி ஒதுக்கீடு.
மூன்றாம் பாலினத்தவர்களை ஊர்க் காவல் படையில் இணைக்க திட்டம்.
ஊர்க்காவல் காவல் படையினருக்கு சமமான ஊதியம் மூன்றாம் பாலினத்தவருக்கு வழங்கப்படும்.
மதுரை, சேலம், திருச்சி உள்ளிட்ட மாநகராட்சிகளில் மூத்த குடிமக்களுக்கு அன்பு சாலை மையங்கள் அமைக்கப்படும்.