2025-26-ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார். இந்த பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை அவர் வெளியிட்டு வருகிறார்.
தமிழக பட்ஜெட்டின் முக்கிய அறிவிப்புகள்:
உயர்கல்வித்துறைக்கு ரூ.8494 கோடி ஒதுக்கீடு.
வளர்ந்து வரும் துறைகளில் புதிய பட்டப்படிப்புக்கள் உருவாக்கப்படும்.
போட்டி தேர்வு எழுதும் மாணவர்களுக்கு 1 லட்சம் புத்தகங்களுடன் சிறப்பு நூலகங்கள் உருவாக்கப்படும்.
குன்னூர், நத்தம் உள்ளிட்ட பகுதிகளில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும்.
அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் ரூ.300 கோடியில் நவீன வகுப்பறைகள் அமைக்கப்படும்.
அரசு பல்கலைக்கழகங்களுக்கு ஒதுக்கப்படும் நிதி ரூ.700 கோடியாக உயர்த்தப்படும்.
அரசு பொறியியல், கலை கல்லூரிகளில் AI உள்ளிட்ட நவீன பட்டப்படிப்புகள் அறிமுகம் செய்யப்படும்.
அண்ணா பல்கலைக்கழகத்தை ஆசியாவின் தலைசிறந்த கல்வி நிறுவனமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் பல உலக சாம்பியன்களை உருவாக்கும் வகையில், பள்ளி பாடத்தில் சதுரங்க விளையாட்டினை சேர்க்கும் விதமாக உடற்கல்வி பாடத்திட்டம் மாற்றியமைக்கப்படும்.