தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழக அரசின் 2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். தொடர்ந்து பட்ஜெட் அறிவிப்புகளை வெளியிட்டார்.
➥ பூந்தமல்லி – போரூர் மெட்ரோ வழித்தடம் டிசம்பர் மாதம் முதல் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வரும்.
➥ சென்னை கிண்டியில் மெட்ரோ, பேருந்து, ரயில் போக்குவரத்தை இணைக்க ரூ.50 கோடியில் பன்முக மையம் அமைக்கப்படும்.
➥ 500 கிமீ தொலைவுள்ள வனப்பகுதி சாலைகள் ரூ.250 கோடியில் மேம்படுத்தப்படும்.
➥ 10 லட்சம் குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு ரூ.2.5 இலட்சம் கோடி கடனுதவி வழங்கப்படும்.
➥ கலைஞர் கைவினை திட்டத்தில் 19,000 கைவினைஞர்களுக்கு மானிய நிதியாக ரூ.74 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
➥ 1,125 மின் பேருந்துகள் அறிமுகம் செய்யப்படும். (சென்னை – 950, மதுரை – 100, கோவை – 75)
➥ ரூ.1 கோடியில் வேட்டைப் பறவைகள் ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும்.
➥ ரூ.70 கோடியில் 700 டீசல் பேருந்துகளை இயற்கை எரிவாயு மூலம் இயங்கும் பேருந்துகளாக மறுசீரமைக்கப்படும்.
➥ ஒன்றிய அரசு உரிய நிதி அளிக்காததால், பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான உதவித் தொகை மாநில அரசின் நிதியிலிருந்து வழங்கப்படும்.
➥ 10 மாற்றுத்திறனாளிகளை பணியில் அமர்த்தும் நிறுவனங்களுக்கு ரூ.2,000 ஊதிய மானியத் தொகை வழங்கப்படும்.