தமிழ்நாடு நீலகிரி நீர்வளத் துறையில் காலியாக உள்ள டிரைவர் பணியிடத்தினை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. அந்த அறிவிப்பின்படி காலியாக உள்ள டிரைவர் பணியிடத்தை நிரப்புவதற்காக தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக நீலகிரி மாவட்ட நீர்வளத்துறை அறிவித்திருக்கிறது. இந்த அறிவிப்பின்படி உதகமண்டலம் செயற்பொறியாளர் அலுவலகத்தில் ஓட்டுனர் பணிக்கு ஆள் சேர்ப்பு நடப்பதாக தெரிவித்துள்ளது.
இந்த வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிக்க விருப்பம் உடைய நபர்களுக்கு குறைந்தபட்ச வயது வரம்பாக 18 மற்றும் உச்சபட்ச வயது வரம்பாக 32 நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. எஸ்சி எஸ்டி மற்றும் இதர பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது தளர்வு வழங்கப்படும் என தெரிவித்துள்ளது. மேலும் இந்த வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிப்பவர்கள் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இலகு ரக அல்லது கனரக வாகன ஓட்டுனர் உரிமம் பெற்றிருப்பதோடு வாகனங்கள் ஓட்டுவதில் மூன்று வருட முன் அனுபவம் இருக்க வேண்டும் என அந்த பதிவில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. மேலும் இந்த வேலை வாய்ப்பிற்கு தேர்வு செய்யப்படுவோருக்கு ஊதியமாக மாதம் ரூ.19,500/- வழங்கப்படும் என அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிக்க தகுதியும் விருப்பம் உடைய நபர்கள் தங்களது சுயவிபரம் கல்விச்சான்றிதழ் ஜாதி சான்றிதழ் பிறப்புச் சான்றிதழ் வாகன ஓட்டுனர் உரிமம் மற்றும் பணி அனுபவ சான்றிதழ் ஆகியவற்றை சுயசான்றொப்பமிட்ட நகல்களுடன் கண்காணிப்புப் பொறியாளர், பவானி வடிநில வட்டம், ஈரோடு-11 என்ற முகவரிக்கு 23.02.2024 தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் இந்த வேலை வாய்ப்பினை பற்றிய பிறகு வரங்களை அறிய nilgrs.nic.in என்ற இணையதள முகவரியில் சென்று தெரிந்து கொள்ளலாம்.