fbpx

“ஐ.டி/கம்ப்யூட்டர் சயின்ஸ் பட்டதாரிகளுக்கு தமிழக அரசின் வேலை வாய்ப்பு..” ₹.20,000/- சம்பளம்.! உடனே அப்ளை பண்ணுங்க.!

தமிழக அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இந்த அறிவிப்பின்படி சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையில் காலியாக உள்ள டேட்டா மேனேஜர் பணியிடத்தை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இந்த வேலை வாய்ப்பிற்கு தகுதியும் திறமையும் உடைய நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அறிவித்துள்ளது .

இதற்கான அறிவிப்பின்படி காலியாக உள்ள டேட்டா மேனேஜர் பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உடைய நபர்கள் கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் இன்பர்மேஷன் டெக்னாலஜி பிரிவுகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். இந்த வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிப்பதற்கு குறைந்தபட்ச வயது வரம்பு 18 ஆகவும் உச்சபட்ச வயது வரம்பு 37-ஆகவும் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இந்த வேலை வாய்ப்பில் தேர்வு செய்யப்படும் நபருக்கு ஊதியமாக Rs..20,000/- வழங்கப்படும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிப்பதற்கு கட்டணங்கள் எதுவும் கிடையாது. விண்ணப்பிக்கும் நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
தகுதியும் திறமையும் உடைய நபர்கள் பூர்த்தி செய்யப்பட்ட தங்களது விண்ணப்பத்தினை சமூக நலத்துறை ஆணையர், சமூக நல ஆணையம், லேடி வெலிங்டன் கல்லூரி வளாகம், காமராஜர் சாலை, சென்னை-05 என்ற முகவரிக்கு30.01.2024 தேதிக்குள் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் இந்த வேலை வாய்ப்பினை பற்றிய பிற தகவல்களை அறிய tn.gov.in என்ற இணையதள முகவரியில் சென்று தெரிந்து கொள்ளலாம்.

Next Post

PM kissan திட்டத்தில் பணம் வரவில்லையா...? இன்று காலை 10.30 மணி முதல் சிறப்பு கூட்டம்...! மிஸ் பண்ணிடாதீங்க

Tue Jan 23 , 2024
காஞ்சிபுரம் மாவட்டத்தின் ஜனவரி 2024 மாதத்திற்கான விவசாயிகளின் நலன் காக்கும் நாள் கூட்டம் இன்று காலை 10.30 மணிக்கு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு கூட்டரங்கில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் வேளாண் அறிவியல் நிலைய வல்லுநர்கள் மற்றும் அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொண்டு வேளாண்மை தொடர்பாக அறிவுரைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு விளக்கம் அளிக்க உள்ளனர். ஆகவே, விவசாய பெருமக்கள் […]

You May Like