fbpx

ஊரக வளர்ச்சித் துறையில் சூப்பரான வேலை வாய்ப்பு.! “8-ஆம் வகுப்பு படிச்சிருந்தா போதும்” ₹.61,000/- வரை சம்பளம்.! தாமதிக்காமல் அப்ளை பண்ணுங்க.!

தமிழக அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த அறிவிப்பின்படி தர்மபுரி ஊரக வளர்ச்சி துறை மற்றும் ஊராட்சி துறையில் காலியாக உள்ள அரசு அலுவலக உதவியாளர் பணி மற்றும் ஓட்டுநர் பணிக்கான காலியிடங்களை நிரப்புவதற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. தர்மபுரி ஊரக வளர்ச்சி துறையில் அலுவலக உதவியாளர் பணிக்கு 2 காலியிடங்களும் ஓட்டுநர் பணிக்கு 1 காலியிடமும் இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டு இருக்கிறது.

மேலும் இந்த வேலை வாய்ப்பிற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும் ஊரக வளர்ச்சித் துறை தெரிவித்துள்ளது. அலுவலக உதவியாளர் மற்றும் ஓட்டுநர் பணிகளுக்கு கல்வித் தகுதியாக 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் இந்த வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிக்க குறைந்தபட்ச வயது வரம்பு 18 ஆகவும் அதிகபட்ச வயது வரம்பு 32 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. எஸ்சி எஸ்டி பிரிவினருக்கு 5 வருட வயது தளர்வு வழங்கப்பட்டுள்ளது. மேலும் பி.சி மற்றும் எம்.பி.சி பிரிவினருக்கு வயது வரம்பில் 2 வருடங்கள் தளர்வு வழங்கப்பட்டுள்ளது.

அலுவலக உதவியாளர் பணிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு ஊதியமாக மாதம் Rs.15,700 முதல் Rs.50,000/- வரை வழங்கப்படும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஓட்டுனர் பணிக்கு ஊதியமாக Rs.19,500 முதல் Rs.61,000/- வரை வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிக்க விருப்பம் உடைய நபர்கள் தங்களுடைய விண்ணப்பம் மற்றும் ஆவணங்களை ஆணையாளர், ஊராட்சி ஒன்றியம், அரூர் என்ற முகவரிக்கு 29 1 2024 தேதிக்குள் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் இந்த வேலை வாய்ப்பினை பற்றிய பிற தகவல்களை அறிய dharmapuri.nic.in என்ற இணையதள முகவரியில் சென்று தெரிந்து கொள்ளலாம்.

Next Post

"அலங்காநல்லூர் வாடியை அலறவிட்ட கட்டப்பா.." கொம்பு வச்ச சிங்கமடா.! கார் பரிசை தட்டிச் சென்ற உரிமையாளர்.!

Wed Jan 17 , 2024
தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் ஆரவாரமாக நடைபெற்று முடிந்திருக்கிறது. மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டுக்கு புகழ்பெற்ற அவனியாபுரம் பாலமேடு ஆகிய பகுதிகளில் நேற்றைய தினம் ஜல்லிக்கட்டு போட்டிகள் முடிவடைந்த நிலையில் இன்று உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றது. இன்று காலை விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைக்க கோலாகலமாக தொடங்கியது அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு. சீறிப்பாய்ந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் லாபகமாக பிடித்த காட்சிகள் ரசிகர்களை விறுவிறுப்பின் […]

You May Like