fbpx

திருடப்பட்ட சிலைகள் அமெரிக்காவில் கண்டுபிடிப்பு … 60 ஆண்டுகளுக்கு முன்னர் சிலை திருட்டு சம்பவம் …

தஞ்சாவூரில் திருடப்பட்ட மூன்று சிலைகள் அமெரிக்க அருங்காட்சியகத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே சுந்தரபெருமாள் கோயில் கிராமத்தில் உள்ள சவுந்தராஜ பெருமாள் கோவிலுக்கு சொந்தமானது ஸ்ரீதேவி , விஷ்ணு, காளிங்க நார்த்தனர் கிருஷ்ணன். 3 ஐம்பொன் சிலைகள் . இந்த சிலைகள் சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த 3 சிலைகளையும் வெளிநாட்டுக்கு கடத்தி விற்றது பின்னர் தெரியவந்தது. கடந்த 2020ம் ஆண்டில் ராஜா என்பவர் அளித்த புகாரில் சென்னை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சி.ஐ.டி.யில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும் காணாமல் போன சிலைகளைப் போலவே போலியான சிலைகளை வைத்ததும் தெரியவந்தது. இது தொடர்பாக விசாரணை நடத்தியதில் புதுச்சேரி இந்தோ பிரெஞ்ச் இன்ஸ்டியூடில் சிலைகளின் புகைப்படங்களுடன் ஒப்பிட்டு பார்க்கப்பட்டது. அப்போதுதான் போலி சிலைகள் என உறுதியானது. இதையடுத்து இந்த சிலை எப்படி காணாமல் போனது என்பது பற்றி தகவல் திரட்டினர். காணாமல் போன சிலையை கண்டுபிடிக்கவும் நடிவடிக்கைஎடுத்து வந்தனர். இணையதளங்கள் மூலமாக புகைப்படங்களை வெளியிட்டு தேடப்பட்டது.

இந்நிலையில் அமெரிக்க அருங்காட்சியகத்தில் அந்த 3 சிலைகளும் இருப்பதாக தகவல் கிடைத்தது. சான்பிரான்சிஸ்கோவில் ஆசிய கலை அருங்காட்சியகத்தில் 26 இன்ச்சிலான களிங்கனார்த்தன கிருஷ்ணன் சிலையும் , அமெரிக்க டெக்சாஸ் கிம்பெல் கலை அருங்காட்சியகத்தில் 33.5 இன்ச்சில் விஷ்ணு சிலையும் , அமெரிக்காவின் புளோரிடா ஹில்ஸ் ஏல மையத்தில் ஸ்ரீதேவி சிலையும் இருப்பதை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கண்டுபிடித்தனர். இதை அடுத்து அமெரிக்காவில் இருந்த அந்த சிலைகளையும் மீட்டு கொண்டு வர சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Next Post

ஜி ஸ்கொயர் நிறுவனம்..! சவுக்கு சங்கருக்கு தடை..! சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!

Thu Sep 8 , 2022
ஜி ஸ்கொயர் ரியல் எஸ்டேட் நிறுவனம் குறித்து அவதூறு கருத்துகளை வெளியிட சவுக்கு சங்கருக்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தங்கள் நிறுவனம் குறித்து சவுக்கு சங்கர், பல்வேறு சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக அவதூறு கருத்துக்களை வெளியிட்டு வருவதால், அதற்கு தடை விதிக்கக் கோரி தென்னிந்தியாவைச் சேர்ந்த ஜி ஸ்கொயர் என்கிற கட்டுமான நிறுவனம் சார்பில் என்.விவேகானந்தன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவில், சவுக்கு […]

You May Like