ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்டவுடன் மாதந்தோறும் மின் கணக்கீடு செய்யும் நடைமுறை தொடங்கும் என அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார்.
சென்னை அண்ணாசாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கோடைக்காலத்தில் தடையற்ற மின் விநியோகம் வழங்குவது குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. 6,534 புதிய மின்மாற்றிகளில் 5,407 மின் மாற்றிகள் மாற்றப்பட்டுள்ளன.
புதிய மின் இணைப்புகளை காலதாமதமின்றி வழங்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஸ்மார்ட் மீட்டர்களுக்கு புதிய ஒப்பந்தம் கோரப்பட உள்ள நிலையில், விரைந்து புதிய ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் பணி நடைபெறும். மேலும், 14,500 மெகாவாட் அளவு புதுப்பிக்கத்தக்க மின்சார உற்பத்திக்கு விரைவில் டெண்டர் கோரப்படும்.
தமிழ்நாடு முழுவதும் புதிய ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்பட்ட உடன் மாதாந்திர மின் கணக்கீடு முறை தொடங்கும். இது விரைவில் உறுதியாக நடைமுறைக்கு கொண்டு வரப்படும். இந்தாண்டு கோடை காலத்தில் தாழ்வழுத்த மின்சாரப் பிரச்சனைகள் கண்டிப்பாக இருக்காது” என்று தெரிவித்துள்ளார்.
Read More : ”கண்டிப்பா நீங்க வரணும்”..!! திடீரென விஜய்க்கு அழைப்பு விடுத்த ஆளுநர்..!! அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு..!!