தமிழ் எழுத மற்றும் படிக்கத் தெரிந்தவர்களுக்கான வேலை தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
சுவாமி நாத சுவாமி கோவில் இளநிலை உதவியாளர் , உதவி மின்வாரியர் , உதவி பிரசாரகம் , ஸ்தானிகம் பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்து புதியஅறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு மொத்தம் 6 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. தேவையான தகுதிகள் பற்றிய முழுவிவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள தகுதிவாய்ந்தவர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருப்பமுள்ளவர்கள் 15.10.2022க்குள் விண்ணிப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நிறுவனம் – சுவாமிநாத சுவாமி கோவில்
பணியின் பெயர் – ஜுனியர் அசிஸ்டன்ட், அசிஸ்டன்ட் எலக்ட்ரீசியன், உதவி பிரசராகம் ஸ்தானிகம்
பணியிடங்கள் – 6 பணியிடங்கள்
கடைசி தேதி – 15.10.2022
விண்ணப்பிக்கும் முறை – அலுவலகம்
TNHRCE காலிப் பணியிடங்கள்
தற்போது வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின் படி இளநிலை உதவியாளர் , உதவி மின்வாரியர் உதவி பிரசாரகம் , ஸ்தானிகம் என 6 காலிப்பணியிடங்கள் உள்ளன.
ஜுனியர் அசிஸ்டன்ட் , உதவி பிரசாரகம் தலா 2 பணியிடங்கள் உள்ளன. அசிஸ்டன்ட் எலக்ட்ரீசியன் , ஸ்தானிகம் தலா 1 பணியிடம் உள்ளது.
சுவாமிநாத சுவாமி கோயில் பணிக்கு கல்வித் தகுதி
விண்ணப்பதாரர்கள் அந்தந்த பணிக்கேற்ப கல்வித் தகுதி பெற்றிருக்க வேண்டும் ஜுனியர் அசிஸ்டன்ட் பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
தமிழ் எழுத படிக்கத் தெரிந்தால் பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் ஐ.டி.ஐ. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உதவி பிரசாராகம் , ஸ்தானிகம் பணிக்கு தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு – இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் குறைந்த பட்ச வயது 18 எனவும் அதிகபட்சம் 45 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்த கொள்ளலாம்.
ஊதியம் – தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும். ஜுனியர் அசிஸ்டன்ட் – லெவல் 22 க்கு ரூ.18,500 முதல் ரூ.58600 வரை , அசிஸ்டன்ட் எலக்ட்ரீசியன் – லெவல் 8 க்கு ரூ.16,600 முதல் ரூ.52,400 வரை வழங்கப்படும். உதவி பிரசாரகம் லெவல் 10 ரூ.10,000 முதல் ரூ.31,500 வரை வழங்கப்படும், ஸ்தானிகம் – லெவல் 10 , ரூ.10,000 முதல் ரூ.31,500 வரை வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை – இப்பணிக்கு விருப்பமுள்ளவர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் முறை மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். கூடுதல் விவரங்களுக்கு கீழ்கண்ட அறிவிப்பை காணலாம்.
தகுதியானவர்கள் போதிய ஆவணங்களுடன் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும் 15.10.2022 தேதிக்கு பின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.