fbpx

TNPL 2024: த்ரில் வெற்றி!. 5 ரன்கள் வித்தியாசத்தில் நெல்லையை வீழ்த்தி திருப்பூர் தமிழன்ஸ் அபாரம்!

TNPL 2024: தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரில் 5 ரன்கள் வித்தியாசத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் அணியை வீழ்த்தி ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணி த்ரில் வெற்றிபெற்றது.

தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 23 ஆவது நேற்று திருநெல்வேலியில் நடைபெற்றது. இதில் நெல்லை ராயல் கிங்ஸ் – ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற நெல்லை அணி முதலில் பவுலிங் செய்ததது. அதன்படி முதலில் களமிறங்கிய திருப்பூர் தமிழன்ஸ் அணியின் தொடக்க வீரர் அமித் சாத்விக் 0 ரன்னில் வெளியேற, துஷார் ரஹேஜா மற்றும் எஸ் ராதாகிருஷ்ணன் இருவரும் இணைந்து அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தனர்.

இதில் ரஹேஜா 41 ரன்களுக்கு ஆட்டமிழக்க, ராதாகிருஷ்ணன் அரைசதம் அடித்து ஆட்டமிழந்தார். அதன் பிறகு வந்த பாலசந்தர் அனிருத் 14 ரன்னிலும், முகமது அலி 35 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். கடைசியாக வந்த கணேஷ் 36 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியாக ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 189 ரன்கள் குவித்தது. நெல்லை அணியில் சிலம்பரசன் 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார். இம்மானுவேல் செரியன், சோனு யாதவ், எஸ் ஹரிஷ், கோகுல் மூர்த்தி ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.

பின்னர் 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய நெல்லை அணியின் தொடக்க வீரர் குருசாமி ரன் ஏதும் எடுக்காமல் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார். கேப்டன் அருண் கார்த்திக் அதிரடியாக விளையாடி 36 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து அவுட்டானார். அடுத்தடுத்து களமிறங்கிய ராஜகோபால் 1, அருண் குமார் 6 ரன்கள் எடுத்து நடையை கட்டினர்.

இதையடுத்து களமிறங்கிய ரித்திக் ஈஸ்வரன் 59, சோனு யாதவ் 40 ரன்கள் எடுத்தனர். இருப்பினும், 20 ஓவர் முடிவில் நெல்லை அணி 9 விக்கெட்டுகளை இழந்து 184 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் 5 ரன்கள் வித்தியாசத்தில் நெல்லையை வீழ்த்தி திருப்பூர் அணி வெற்றிபெற்றது. திருப்பூர் அணி தரப்பில் அதிகபட்சமாக நடராஜன் 4 விக்கெட்டுகள், ராமலிங்கம் ரோகித் 3, புவனேஸ்வரன், சாய் கிஷோர் ஆகியோர் தலா 1 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

Readmore: ஐஎன்எஸ் பிரம்மபுத்திரா தீ விபத்து!. காணாமல் போன மாலுமியின் உடல் மீட்பு!

English Summary

TNPL 2024: Thrill Win!. Tirupur Tamilans beat Nellai by 5 runs and are awesome!

Kokila

Next Post

திட்டத்தை கைவிட்டு உண்மையை மறைத்த தமிழக அரசு... அம்பலப்படுத்திய மத்திய அமைச்சர்...!

Thu Jul 25 , 2024
The central government is ready to implement the Rameswaram-Dhanushkodi project. But the Tamil Nadu government has written a letter to abandon the project due to land acquisition issues.
அக்னிபாத் வன்முறை..! ரயில்வே சொத்துக்களை சேதப்படுத்திய 2,600 பேர் கைது..! மத்திய அமைச்சர் பரபரப்பு தகவல்..!

You May Like