fbpx

TNPL: பரபரப்பான ஆட்டத்தில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது கோவை..!

தமிழ்நாடு ப்ரீமியர் லீக் தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. நேற்றைய தினம் முதல் குவாலிபையர் போட்டியில் லைகா கோவை கிங்ஸ் மற்றும் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதின. இந்த முதல் குவாலிபையர் போட்டியில் வெற்றி பெரும் அணி நேராக இறுதி ஆட்டத்திற்கு செல்லும், தோல்வி அடைந்த அணி இரண்டாவது குவாலிபையரில் பங்குபெறும் என்பதால் இறுதிப்போட்டிக்குள் நுழைய இரு அணிகளும் போராடின.

நேற்றைய போட்டியில் முதலில் களமிறங்கிய கோவை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 193 ரன்கள் எடுத்தது. கோவை அணி சார்பில் சச்சின்-70 (46 பந்துகளில்) ரன்களும், முகிலேஷ்-44 (27 பந்துகளில்) ரன்கள் எடுத்து அணியை வலுவாக்கினர். 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய திண்டுக்கல் அணிக்கு ஏமாற்றம் மற்றுமே மிஞ்சியது.

கோவை அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் விக்கெட்டுகளை பறிகொடுத்தது திண்டுக்கல் அணி, ஆனால் ஒருபக்கம் சிறப்பாக விளையாடிய திண்டுக்கல் அணியின் பேட்ஸ்மேன் சரத்குமார் 26 பந்துகளில் 8 சிக்சர்கள் உள்பட 62 ரன்கள் விளாசி அவுட் ஆனார். இறுதியில் 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 163 ரன்கள் மட்டுமே எடுத்தது திண்டுக்கல் அணி. 30 ரன்கள் வித்தியாசத்தில் திண்டுக்கல் அணியை வீழ்த்தி அபார வெற்றிபெற்றது கோவை அனி. இந்த வெற்றியின் மூலம் நடப்பு டிஎன்பிஎல் தொடரின் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது லைகா கோவை கிங்ஸ் அணி.

Kathir

Next Post

முடி உதிர்வு மற்றும் நரை முடி பிரச்சனையா..? கருஞ்சிரகத்தை இப்படி பயன்படுத்தினால் போதும்...

Sat Jul 8 , 2023
கருஞ்சீரகம், பல்லாயிரம் ஆண்டுகளாக மருத்துவத்தில் முக்கிய பங்காற்றி வருகிறது. கருஞ்சீரகத்தில், வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் பி 12, நியாசின், வைட்டமின் சி உள்ளிட்ட சத்துக்கள் அதிகளவில் உள்ளன. கருஞ்சீரக எண்ணெயில், அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள், வைட்டமின்கள், மினரல்கள் உள்ளன. கருஞ்சீரகத்தில், நார்ச்சத்துக்கள்,அமினோ அமிலங்கள், இரும்புச்சத்து, சோடியம், கால்சியம் மற்றும் பொட்டாசியம் அதிகளவில் இருப்பதால், முடி தொடர்பான பிரச்சனைகளை சரி செய்ய உதவுகிறது. மேலும் முடியின் வளர்ச்சியிலும், ஆரோக்கியத்திலும் […]

You May Like