fbpx

டிஎன்பிஎஸ்சி தலைவர் பதவி..!! அரசின் பரிந்துரையை நிறுத்தி வைத்த ஆளுநர் ஆர்.என்.ரவி..? வெளியான அதிர்ச்சி தகவல்..!!

டிஎன்பிஎஸ்சி தலைவர் உள்ளிட்ட 10 உறுப்பினர்கள் பதவிகளுக்கான பெயர்களை தமிழ்நாடு அரசு பரிந்துரைத்துள்ள நிலையில், அதற்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் நிறுத்தி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அரசு துறைகளுக்கு தேவையான பணியாளர்களை நியமனம் செய்வதில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் முக்கிய பங்காற்றி வருகிறது. ஆனால், டிஎன்பிஎஸ்சிக்கு நிரந்தர தலைவர் மற்றும் போதிய உறுப்பினர்கள் இல்லை என்று கூறப்படுகிறது. இந்த அமைப்பில் தலைவர் மற்றும் 13 உறுப்பினர்கள் பணியாற்ற வேண்டும். ஆனால், பல மாதங்களாக சில உறுப்பினர் பணியிடங்கள் காலியாக உள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) தலைவர் பதவிக்கு சைலேந்திரபாபு மற்றும் 10 உறுப்பினர் பதவிகளுக்கு தமிழ்நாடு அரசு பரிந்துரை செய்து ஆளுநருக்கு அனுப்பியது. ஆனால், அரசின் பரிந்துரைக்கு ஒப்புதல் அளிக்காமல் ஒரு மாதமாக ஆளுநர் ஆர்.என்.ரவி நிறுத்தி வைத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பாக சில கேள்விகளை ஆளுநர் எழுப்பியதாகவும், அதற்கு தமிழ்நாடு அரசு தரப்பில் விளக்கம் அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

Chella

Next Post

நடிகர் சரத்குமாரின் தந்தையை பார்த்துள்ளீர்களா..? அவரும் பிரபல நடிகர் தானாம்..? வைரலாகும் புகைப்படம்..!!

Mon Aug 21 , 2023
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சரத்குமார். இவர் ஒரு சிறந்த நடிகர் மட்டுமின்றி, அரசியல்வாதியும் கூட. இவர் தென்னிந்திய திரைப்பட சங்கத் தலைவராகவும் இருந்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து இயக்குனர் ராஜசேகரன் பவர் இயக்கத்தில் சின்ன பூவே மெல்ல பேசு என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக எண்ட்ரி கொண்டார்.கதாநாயகனாக தமிழ் சினிமாவில் தனது பயணத்தை ஆரம்பித்துள்ளார் நடிகர் சரத்குமார். ஒரு தயாரிப்பாளர் ஒரு பழக்கமான முகம் […]

You May Like