fbpx

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு முடிவுகள்..!! இன்று மாலை வெளியாகும்..!! அமைச்சர் சொன்ன குட் நியூஸ்..!!

டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ முதன்மை தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாகும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசு துறைகளில் காலியாக உள்ள குரூப் 2, 2ஏ பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு டிஎன்பிஎஸ்சி சார்பில் கடந்த ஆண்டு பிப்ரவரியில் வெளியானது. இதற்கான முதல்நிலை தேர்வுகள் முடிந்து, கடந்த பிப்வரி 25ஆம் தேதி முதன்மை தேர்வுகள் நடத்தப்பட்டது. இதற்கான முடிவுகள் ஏப்ரல் மாதத்தில் வெளியிடப்படும் என அறிவித்தும் 10 மாதம் ஆகியும் இன்னும் வெளியாகவில்லை.

இதனால் தேர்வெழுதிய தேர்வர்கள் கவலையில் உள்ளனர். தேர்வு முடிவுகளை விரைந்து வெளியிட வேண்டும் என அரசியல் கட்சியினர் உட்பட பலரும் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில், ‘டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ முதன்மை தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாகும் எனவும், தாமதத்திற்காக காரணம் குறித்த அறிக்கை இன்று (டிச.15) மாலை வெளியாகும் என்றும்’ அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

Chella

Next Post

வீட்டிலிருந்தே வாக்காளர் அடையாள அட்டையில் புகைப்படத்தை மாற்ற வேண்டுமா?… ஆன்லைனில் ரொம்ப சிம்பிள்!

Fri Dec 15 , 2023
வாக்காளர் அடையாள அட்டையில் உள்ள உங்களுடைய புகைப்படத்தை மாற்ற விரும்பினால் வீட்டில் உட்கார்ந்து கொண்டே எளிதாக அதை மாற்றலாம். ஆன்லைன் முறையைப் பயன்படுத்தி வீட்டிலிருந்தபடியே வாக்காளர் அடையாள அட்டையில் உள்ள புகைப்படத்தை சில நிமிடங்களில் புதுப்பிக்கலாம். அதற்கான படிப்படியான செயல்முறை என்ன என்று இங்கே பார்க்கலாம். முதலில் உங்கள் மாநிலத்தின் வாக்காளர் சேவை போர்ட்டலுக்குச் செல்லவும். இங்கே வாக்காளர் பட்டியலில் திருத்தம் என்ற விருப்பம் இருக்கும். அதைத் தேர்ந்தெடுக்கவும். இங்கிருந்து […]

You May Like