fbpx

TNPSC: GROUP II, IIA தேர்ச்சி பெற்றவர்களுக்கு இலவச பயிற்சி வகுப்பு…! விண்ணப்பிக்க நாளை தான் கடைசி நாள்…!

தமிழ்நாடு அரசு பணியாளர்‌ தேர்வாணையம்‌ GROUP II, IIA 2022 முதல்நிலை தேர்வில்‌ தேர்ச்சி பெற்றவர்களுக்கு முதன்மைத்‌ தேர்விற்க்கான இலவச பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்‌ வெளியேற்றுள்ள செய்தி குறிப்பில்; தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்‌ தொழில்நெறி வழிகாட்டும்‌ மையத்தில்‌ செயல்பட்டு வரும்‌ தன்னார்வ பயிலும்‌ வட்டத்தின்‌ வாயிலாக பல்வேறு போட்டித்‌ தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள்‌ நடத்தப்படுகிறது. தற்போது தருமபுரி மாவட்ட வேலைநாடுநர்கள்‌ பயனடையும்‌ வகையில்‌ தமிழ்நாடு அரசு பணியாளர்‌ தேர்வாணையம்‌ GROUP II, IIA 2022 முதல்நிலை தேர்வில்‌ தேர்ச்சி பெற்றவர்களுக்கு முதன்மைத்‌ தேர்விற்க்கான இலவச பயிற்சி வகுப்பு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்‌ தொழில்நெறி வழிகாட்டும்‌ மையத்தில்‌ வருகின்ற 23.11.2022 அன்று காலை 10.00 மணி முதல்‌ துவங்கப்பட உள்ளது.

இப்பயிற்சி வகுப்பில்‌ கலந்து கொள்ள விருப்பம்‌ உள்ளவர்கள்‌ https://cutt.ly/MMrrsiT என்ற Google படிவத்தில்‌ விண்ணப்பிக்கவும்‌. மேலும்‌ விவரங்களுக்கு தொலைபேசி எண்‌ 04342 296188 வாயிலாக தொடர்பு கொள்ளலாம்‌. முதல்நிலை தேர்வில்‌ தேர்ச்சி பெற்று, முதன்மைத்‌ தேர்விற்க்கான இலவச பயிற்சி வகுப்பில்‌ தருமபுரி மாவட்டத்தில்‌ உள்ள தகுதி வாய்ந்தவர்கள்‌ கலந்து கொண்டு பயன்‌ பெறலாம்‌ என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

அதிர்ச்சி செய்தி...! 90's கிட்ஸ்களுக்கு பரிச்சயமான பிரபலம் காலமானார்...!

Tue Nov 22 , 2022
90’s கிட்ஸ்களின் பிரபல பானமான ‘ரஸ்னா’வின் நிறுவனர் தலைவர் அரீஸ் பைரோஸ் ஷா கம்பட்டா மாரடைப்பால் அகமதாபாத்தில் காலமானார். தீராத நோயால் அவதிப்பட்டு வந்த 85 வயதான தொழிலதிபர் நவம்பர் 19ஆம் தேதி காலமானார் என்று அவரது நிறுவனம் தெரிவித்துள்ளது. பல தசாப்தங்களுக்கு முன்பு, அரீஸின் தந்தை பெரோசா கம்பட்டா ஒரு சிறிய வணிகத்தைத் தொடங்கினார். அவர்கள் 60 க்கும் மேற்பட்ட நாடுகளில் இருப்பதன் மூலம் உலகின் மிகப்பெரிய செறிவூட்டப்பட்ட […]

You May Like