fbpx

TNPSC Group-4 : மொத்தம் 6,244 காலி பணியிடங்கள்…! பிப்.28-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்…!

ஜூன் 9ம் தேதி காலை 9.30 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை குரூப்-4 தேர்வு நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

இது குறித்து தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; வி.ஏ.ஒ., இளநிலை உதவியாளர் உட்பட 6,244 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-4 தேர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம். குரூப்-4 தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க பிப்.28ம் தேதி கடைசி நாள். tnpsc.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். ஜூன் 9ம் தேதி காலை 9.30 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை குரூப்-4 தேர்வு நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

தேர்வுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் படிவத்தில் உள்ள அனைத்தையும் பூர்த்தி செய்திருப்பதை உறுதி செய்ய வேண்டும். எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, கவுன்சிலிங் அல்லது தேர்வுப் பட்டியலில் பெயரைச் சேர்ப்பது மட்டுமே விண்ணப்பதாரர்களுக்கு நியமனம் செய்வதற்கான எந்த உரிமையையும் அளிக்காது.

தவறான தகவல், விதிகள் அல்லது அறிவுறுத்தல்களை மீறியது உறுதிசெய்யப்பட்டால், தேர்வு செய்யப்பட்ட பின்னரும், உரிய செயல்முறைக்குப் பிறகு, எந்த நிலையிலும் வேட்புமனுவை நிராகரிப்பதற்கான உரிமையை ஆணையம் கொண்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

தமிழகத்தில் என்ன சாதித்தார்கள்?… 70 ஆண்டுகால ஆட்சியை மாற்றி அமைக்க வேண்டும்!… அண்ணாமலை சூளுரை!

Tue Jan 30 , 2024
தமிழகத்தில் ஆண்ட கட்சிகள், ஆளும் கட்சிகள் மக்களின் நலனின் அக்கறை செலுத்தவில்லை. எனவே, 2024ம் ஆண்டு மக்களவை தேர்தல் மூலம் தமிழகத்தில் 70 ஆண்டுகால ஆட்சியை மாற்றி அமைக்க வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் நேற்று தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை ‘என் மண், என் மக்கள் என்ற பாதயாத்திரையை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் ஆண்ட கட்சிகள், ஆளும் […]

You May Like