தமிழ்நாடு பொதுப் பணியாளர் தேர்வாணையம் பொறியியல் மற்றும் அதனை சார்ந்த ஒருங்கிணைந்த பிரிவுகளில் 1083 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. இந்தப் பணியிடங்களுக்காக தேர்வு எழுத விருப்பப்படுவோர் இணையதளத்தின் மூலம் நேரடியாக விண்ணப்பித்துக் கொள்ளலாம். தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் ஒருங்கிணைந்த பொறியியல் துறைகளில் இளநிலை வரைவாளர், வரைவாளர், போர் மேன் உள்ளிட்ட பதவிகளுக்காக 1083 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலமாக வரவேற்கப்படுவதாக அறிவித்திருக்கிறது.
இந்த விண்ணப்பதாரர்கள் போட்டி தேர்வுகளில் மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள். போட்டி தேர்வுகளில் வெற்றி பெறுபவர்கள் சான்றிதழ் சரி பார்த்தலுக்கு பின் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு அதன் மூலம் பணியமறுத்தப்படுவார்கள் என்று தெரிவித்திருக்கிறது. வருகின்ற மார்ச் மாதம் நான்காம் தேதி இதற்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாளாகும். இதற்கான தீர்வுகள் வருகின்ற மே மாதம் 27ஆம் தேதி காலை 9:30 மணியிலிருந்து 12:30 வரையும் இரண்டாவது தேர்வுகள் இரண்டு மணியிலிருந்து 5 மணி வரையும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் அங்கீகரிக்கப்பட்ட ஒரு பல்கலைக்கழகத்திலிருந்து முதுநிலை பட்டய படிப்பு அல்லது பொறியியல் பட்டப் படிப்பு முடித்திருக்க வேண்டும். இளநிலை வரைவாளர், அலுவலர் மற்றும் வரைவாளர் இரண்டாம் நிலை ஆகியோருக்கு சம்பளமாக ரூபாய் 35,400 இல் இருந்து ரூபாய் 130,400 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. போர்மேன் பணிகளுக்கு சம்பளமாக ரூபாய் 19,500 இல் இருந்து ரூபாய் 71,900 வரை நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இளநிலை வரைவாளர் அலுவலர் பணிகளுக்கான உச்சபட்ச வயது வரம்பு 37 ஆகும்.
மற்ற பணிகளுக்கான உச்சபட்ச வயது வரம்பு 32. வயது தளர்வு மற்றும் சலுகைகள் பற்றிய விவரங்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளத்தில் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிகளுக்கு பதிவு கட்டணமாக 150 ரூபாயும் பெரும் கட்டணமாக 100 ரூபாயும் இணையதள வங்கி சேவை கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்ட் மூலமாகவும் இணையதளத்தில் விண்ணப்பிக்கும் போது செலுத்தலாம். மேலும் இந்த வேலை வாய்ப்பு பற்றிய முழு விவரங்களும் தமிழ்நாடு அரசின் பணியாளர் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான tnpsc.gov.in என்ற முகவரியில் கொடுக்கப்பட்டுள்ளது.