தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணியின் முழு விவரம்…
பதவியின் பெயர்: சாலை ஆய்வாளர்
காலிப்பணியிடங்கள்: 760
ஊதியம்: ரூ.19,500 முதல் ரூ.71,500 வரை
வயது வரம்பு: பொதுப் பிரிவினர், 1.07.2023 அன்று 37 வயதிற்கு மிகாதவராக இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி:
- ஐடிஐ (கட்டுமான வரைதொழில் அலுவலர்) சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
- சிவில் படிப்பில் பட்டயம் பெற்ற விண்ணப்பத்தாரக்ளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
தேர்வு முறை:
எழுத்துத் தேர்வு
தாள் 1: பாடத்தாள் (தொழிற்பிரிவு தரம்)
தாள் 2: பகுதி அ: கட்டாய தமிழ் மொழி தகுதித் தேர்வு
பகுதி ஆ : பொது அறிவு
விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க கடைசி தேதி: 11.02.2023
விண்ணப்பக் கட்டணம்:
இதற்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.100. டிஎன்பிஎஸ்சி ஒருமுறை பதிவுக் கட்டணம் ரூ.150 ஆகும். ஆதிதிராவிடர், அருந்ததியர், பழங்குடியினர், ஆதரவற்ற விதவைகள், நிர்ணயிக்கப்பட்ட குறைபாடுள்ள மாற்றுத் திறனாளிகள் தேர்வுக் கட்டணம் செலுத்த தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிப்பது எப்படி..?
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.