தமிழ்நாடு அரசு துறைகளில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பை தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான, ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவைகள் தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம். ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவைத் துறையில் Manager Grade – III, Senior Officer, Assistant Manager உட்பட பல பதவிகளுக்கு மொத்தமாக 118 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
பணிக்கு தொடர்புடைய துறைகளிலோ அல்லது துறை சார்ந்த பாடங்களிலோ இளங்கலை, முதுகலை, CA, ICWA, MBA, BE என இதில் ஏதேனும் ஒரு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழ் தகுதித்தேர்வு, பொது அறிவு மற்றும் கணிதத் திறன் சார்ந்து எழுத்துத் தேர்வில் கேள்விகள் இருக்கும். இந்த தேர்வுகள் வரும் 28.07.2024 அன்று நடைபெறவுள்ளது. நிரப்பப்படும் பணியிடங்களுக்கு தேவையான அனுபவம், கல்வித் தகுதி உள்ளவர்கள் ஜூன் 14-ம் தேதிக்குள் https://tnpsc.gov.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.