fbpx

மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு நடத்துவதில் சிக்கல்…! TNSED செயலி முடக்கம்…!

பள்ளிக்கல்வித்துறையின் TNSED செயலி முடங்கியதால் 1முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

பள்ளிக்கல்வித்துறை சார்பில் தமிழகத்தில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு என்னும் எழுத்தும் திட்டத்தில் பாடத்திட்டம் வடிவமைக்கப்ட்டு கற்பிக்கப்பட்டு வருகிறது. இந்த மாணவர்களுக்கு TNSED என்ற அலைபேசி செயலி மூலம் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு கடந்த வியாழக்கிழமை தொடங்கி 23ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. தேர்வுக்காக அலைபேசி செயலியில் ஒவ்வொரு மாணவருக்கும் தனித்தனியே வினாத்தாள் வெளியாகும், அந்த செயலிலேயே மாணவர்களை பதிலளிக்கும் வகையில் தேர்வுகள் நடத்தப்படடும் இதற்காக ஆசிரியர்களின் அலைபேசி பயன்படுத்தப்பட்டு வந்தன

அதன்படி அனைத்து பள்ளிகளும் காலாண்டு தேர்வுக்காக தயாராகிவந்த நிலையில் TNSED செயலி முடங்கியுள்ளது. இதனால் 1 முதல் 5ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தேர்வுக்காக தயாராகி வந்த மாணவர்கள் தேர்வு எழுத முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

Kathir

Next Post

அறிஞர் அண்ணா பிறந்தநாள்..!! 127 காவலர்களுக்கு அண்ணா பதக்கங்கள் அறிவிப்பு..!!

Fri Sep 15 , 2023
தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”தமிழ்நாட்டில் காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை, சிறைத்துறை, ஊர்க்காவல் படை, விரல்ரேகைப் பிரிவு மற்றும் தடய அறிவியல் துறைகளில் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்கள் மற்றும் பணியாளர்களை அங்கீகரிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 15ஆம் தேதி அண்ணா பிறந்த நாளன்று தமிழக முதல்வரின் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் இந்தாண்டு காவல்துறையில் தலைமைக் காவலர் முதல் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வரையிலான 100 […]

You May Like