தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை ஜனவரி 14-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. மற்ற பண்டிகைகளை விட பொங்கல் பண்டிகைக்கு நான்கு நாட்கள் அரசு விடுமுறை உண்டு. இதனால் பெரும்பாலானவர்கள் இந்த விடுமுறை நாட்களில் பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு சென்று வருவார்கள். இவர்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறது .
வருகின்ற ஜனவரி மாதம் 14ஆம் தேதி போகிப் பண்டிகையும் 15 ஆம் தேதி பொங்கலும் 16 ஆம் தேதி மாட்டுப் பொங்கல் மற்றும் 17ஆம் தேதி காணும் பொங்கல் என நான்கு நாட்கள் விடுமுறை இருக்கிறது. இதில் 13 ஆம் தேதி சென்னையிலிருந்து தங்கள் சொந்த ஊர் செல்பவர்களுக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் பயணச்சீட்டு முன்பதிவு தொடர்பான அறிக்கையை வெளியிட்டு இருக்கிறது.
அந்த அறிவிப்பின்படி ஜனவரி மாதம் 13ம் தேதி மற்றும் 14ஆம் தேதி சென்னையில் இருந்து சொந்த ஊர் செல்பவர்களுக்கான முன்பதிவு டிசம்பர் 13ஆம் தேதியில் இருந்து தொடங்கும் என அறிவித்திருக்கிறது. சென்னையில் இருந்து சொந்த ஊர் செல்பவர்கள் தங்களது பயண சீட்டுகளை டிஎன்எஸ்டிசி அப்ளிகேஷன் மூலமாகவோ அல்லது இணையதளம் மூலமாக முன்பதிவு செய்து கொள்ளலாம் எனவும் தெரிவித்திருக்கிறது. மேலும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் முன்பதிவு மையங்களில் சென்றும் முன்பதிவு செய்து கொள்ளலாம் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.