fbpx

’முழு அரசியல்வாதியா மாறணும்’..!! விஜய்க்கு முதல்வராகும் யோகம் இருக்கா..? அவரது ஜாதகம் என்ன சொல்கிறது..?

தமிழ்நாட்டில் நடிகர்கள் பலரும் அரசியல் கட்சி ஆரம்பித்தாலும் எம்ஜிஆர், ஜெயலலிதா, விஜயகாந்த் போல யாராலும் ஜெயிக்க முடியவில்லை. அந்த வகையில், விஜய் தொடங்கியுள்ள அரசியல் பயணம், அவரை முதல்வர் நாற்காலியில் அமர வைக்குமா..? ஜாதகத்தில் உள்ள யோகங்கள் சொல்வதென்ன..? என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

நடிகர் விஜய் கடக ராசி பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர். அவரது ராசியில் சந்திரன் உடன் செவ்வாய் அமர்ந்திருக்கிறார். செவ்வாய் நீச்சம் பெற்றிருந்தாலும், ஆட்சி பெற்ற சந்திரன் உடன் அமர்ந்திருப்பதால் நீச்ச பங்க ராஜயோக அமைப்பு விஜய்க்கு இருக்கிறது. சூரியன், சனி சேர்ந்திருப்பது அரச பதவியை தேடித்தரும். ”ஆசை இருக்கு தாசில் பண்ண அதிர்ஷ்டம் இருக்கு கழுதை மேய்க்க” என்ற பழமொழி உண்டு.

பணக்காரனாகவோ, அரசியல் தலைவராகவோ, புகழ் பெற்ற நடிகராக வருவதற்கோ ஒரு யோகம் வேண்டும். ஜாதகத்தில் கிரகங்களின் கூட்டணி பார்வை, சேர்க்கை, இருக்கும் இடத்தைப் பொறுத்து அந்த யோகங்கள் அமையக்கூடும். ஒருவரின் பிறந்த ஜாதகத்தில் சனி நல்ல வலிமையோடு இருப்பது அவசியம். விஜய் ஜாதகப்படி 2014 முதல் சுக்கிர திசை நடைபெறுகிறது. இப்போது சுக்கிர திசை ராகு புத்தி நடந்து கொண்டிருக்கிறது. தலைவா படத்தின் போது நிறைய நெருக்கடியை விஜய் சந்தித்தார். அரசியல் ரீதியான பிரச்சனைகளையும் சந்தித்தார். இவருடைய பல திரைப்படங்கள் சர்ச்சைகளை சந்தித்துதான் வெற்றி கிடைத்துள்ளது. 2026 இவர் அரசியலில் அடி எடுத்து வைத்தாலும் தனது இருப்பை தக்க வைக்க முடியும்.

அரசியல்வாதிகள் என்றாலே நன்றாக பேசத்தெரிந்திருக்க வேண்டும். விஜய் தற்போது நிறைய பேச ஆரம்பித்திருக்கிறார். அவர் ஜாதகத்தில் 10ஆம் வீட்டில் சனியுடன் புதன் சேர்ந்திருப்பதால் நகைச்சுவையாக பேசுவார். மூன்றெழுத்து பற்றி பேசியிருப்பதால் எம்ஜிஆர் போல இவரை சுற்றி எப்போதும் ஒரு கூட்டம் இருந்து கொண்டே இருக்கும். தொண்டர்களின் ஆசி கிடைக்கும். நடிகர் விஜய் இளைய தளபதியாக இருந்து தளபதியாக மாறியிருக்கிறார்.

அவரது ராசி லக்னப்படி கும்ப ராசியில் சனி கோச்சாரத்தில் சஞ்சரிக்கும் இந்த நேரத்தில் அரசியல் பயணத்தை தொடங்கியுள்ளார். விஜய் முழுமையான அரசியல்வாதியாக மாற இன்னும் இரண்டு ஆண்டுகள் ஆகும். இப்போது விஜய்க்கு 50 வயது. அவரது 52-வயதில் இருந்து முழு அரசியல்வாதியாக மாறுவார். 2031 சட்டசபை தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெற முடியும் என்று ஜோதிடர்கள் கூறுகின்றனர். சினிமா வேறு அரசியல் களம் வேறு. நடிகர் விஜய்க்கு முதல்வர் நாற்காலி கிடைக்குமா? காலம்தான் பதில் சொல்லும்.

Read More : விஜய்க்கு இப்படி ஒரு நிலைமையா..? அடி மேல் அடி..!! என்ன செய்யப்போகிறார்..?

English Summary

Astrologers say that Vijay can get a huge victory in 2031 assembly elections.

Chella

Next Post

75 சடலங்களுக்கு மத்தியில் செக்ஸ்.. பிரேத பரிசோதனை அறையில் ஊழியர் செய்த அட்டூழியம்..!! - வைரலாகும் வீடியோ

Fri Aug 23 , 2024
Man And Woman Filmed In Obscene Act In Noida Deep Freezer Room Where Dead Bodies Are Stored

You May Like