உடலில் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த பன்னீர் பூவை தண்ணீரில் ஊற வைத்து காலையில் வெறும் வயிற்றில் குடித்துவந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
நவீன வாழ்க்கை முறையினால், நீரிழிவு நோயால் அதிகளவில் மக்கள் பாதிப்படைந்துவருகின்றனர். மேலும் இந்த நோய் சிலருக்கு மரபு வழியாகவும் ஏற்படலாம். சிலருக்கு உணவு பழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறை ஆகியவற்றின் காரணமாகவும் ஏற்படலாம். இத்தகைய ஆபத்தான நோயை கட்டுபடுத்த பன்னீர் பூவை இரவில் ஊறவைத்து காலையில் வெறும் வயிற்றில் குடித்துவர நல்ல பலன் கிடைக்கும்.
பன்னீர் பூ நாட்டு மருந்துகடைகளில் கிடைக்கும்.இரவில் தூங்கும் முன் ஐந்து பூ எடுத்து தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் அந்த பூ உள்ள தண்ணிரை வடிகட்டி வைத்து கொள்ள வேண்டும். பின் வடிகட்டிய அந்த தண்ணீரை அருந்த வேண்டும். இதே போன்று பத்து நாட்கள் தினமும் காலையில் அருந்த வேண்டும். நீங்கள் பத்து நாட்கள் செய்து வந்தால் கண்டிப்பாக உங்களுக்கு சர்க்கரையின் அளவு சரியான அளவு வந்து குணம் அடைவீர்கள்.