பல்வேறு நிலைகளில் உள்ள ‘விவிஐபி கலாச்சாரத்தை’ ஒழிப்பதற்கான பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வைக்கு இணங்க, மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், அலுவலகங்களில் உதவியாளர்களை அழைக்கப் பயன்படுத்தப்படும் மணியை அகற்றுமாறு தனது ஊழியர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

அலுவலக உதவியாளர்களை அழைக்க மணியைப் பயன்படுத்தக்கூடாது, மாறாக அவர்களை தனிப்பட்ட முறையில் அழைக்க வேண்டும் என்று ரயில்வே அமைச்சர் அறிவுறுத்தி உள்ளார். அறிவுறுத்தல் முழுமையாக செயல்படுத்தப்படுவதை உறுதிசெய்ய, வைஷ்னா தனது அலுவலகத்தில் இருந்த மணியை அகற்றி உள்ளார்.
ஒவ்வொரு ஊழியருக்கும் சமமான மரியாதை வழங்கப்படுவதை உறுதி செய்யவும், விவிஐபி கலாச்சாரத்தின் மனநிலையை மாற்றவும் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று அமைச்சர் அலுவலகம் தெரிவித்துள்ளது.