fbpx

கர்ப்பப்பை நீர்க்கட்டி பிரச்சனையை சரிசெய்ய!… இதனை ஒருமுறை குடித்தால் போதும்!… டிரை பண்ணுங்க!

கர்ப்பப்பை நீர்க்கட்டி பிரச்சனையை சரிசெய்ய ஒரு சிறந்த மருத்துவக் குறிப்பை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

பொதுவாக பெண்களுக்கு கர்ப்பப்பை நீர்கட்டிகளால் பல பிரச்சனைகள் உண்டாகும். இந்த கர்பப்பை நீர் கட்டிகள் பெண்களுக்கு ஹார்மோன்கள் சரியாக இல்லாததால் ஏற்படுகின்றது.அதாவது ஹார்மோன் இம்பேலன்ஸ் என்பதானால் கர்பப்பை நீர்க்கட்டிகள் ஏற்படுகின்றது. இந்த ஹார்மோன்கள் இம்பேலன்ஸ் இருப்பதற்கு சில அறிகுறிகள் இருக்கின்றன. முகத்தில் தேவையில்லாமல் முடிவளர்தல், குறிப்பாக உதட்டுக்கு மேலும் தாடைக்கு கீழும் வளரும். சில பெண்களுக்கு மாதவிடாய் சரியாக இல்லாமல் இருக்கும். சில பெண்களுக்கு எடை அதிகரிக்கும்.

குறிப்பாக இடுப்பை சுற்றிலும் சதை அதிகமாக வளர்ந்து அதிக எடையை உண்டாக்கும் இன்னும் சில பெண்களுக்கு குழந்தையின்மை பிரச்சனையை கொண்டு வரும். இந்த பிரச்சனைகளுக்கு எல்லாம் தீர்வாக ஒரு சிறந்த மருத்துவக் குறிப்பை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். தேவையான பொருட்கள்: கற்றாழை மடல் – 1, பனங்கற்கண்டு – ஒரு டீஸ்பூன், மஞ்சள் தூள் – ஒரு டீஸ்பூன், பூண்டு – 2 பல்.

செய்முறை: முதலில் கற்றாழையை எடுத்து அதில் உள்ள ஜெல்லை தனியாக எடுத்து நன்றாக சுத்தம் செய்து அதனை மிக்சி ஜாரில் போட்டுக்கொள்ளவும். பிறகு ஒரு டீஸ்பூன் பனங்கற்கண்டை எடுத்து அந்த மிக்சி ஜாரில் போட்டுக் கொள்ளவும். தண்ணீர் சேர்க்காமல் அரைத்துக் கொள்ளலாம். பிறகு இதில் ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் பூண்டு 2 பல்லை தட்டி இதில் போட்டு கலந்து குடிக்கலாம். இதை வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று நாட்கள் குடிக்கலாம். காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

இதில் இருக்கும் கற்றாழை ஜெல் பெண்களின் கர்பப்பைக்கு நன்கு வலிமை சேர்க்கும். அது மட்டுமில்லாமல் கர்ப்பப்பையில் இருக்கும் கிருமிகளை வெளியேற்றவும் கற்றாழை உதவுகின்றது. பனங்கற்கண்டு உடலுக்கு குளிர்ச்சி தந்து கர்பப்பையில் இருக்கும் கிருமிகளை நீக்கி வெளியேற்றுகிறது. இதில் சேர்க்கப்படும் மஞ்சள் தூளில் குர்குமின் எனப்படும் வேதிப் பொருள் உள்ளது. இந்த வேதிப் பொருள் கர்பப்பையில் இருக்கும் நீர்கட்டிகளை கரைத்து வெளியேற்றும். அது மட்டமில்லாமல் கர்பப்பைக்கு நல்ல வலிமையை கொடுக்கும். இந்த மருந்தை எடுத்துக் கொள்ளும் பெண்கள் ஜங்க் புட்ஸ், பேக்கரி புட்ஸ், பாலிஸ்ட் அரிசி இதையெல்லாம் உண்பதை குறைத்துக் கொள்ள வேண்டும். மைதா மாவினால் ஆன எந்த ஒரு உணவையும் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

Kokila

Next Post

பல் துலக்கும் முன் தண்ணீர் குடிப்பவரா நீங்கள்!... உடலில் இந்த மாற்றங்கள் எல்லாம் நடந்ததா?...

Tue Apr 25 , 2023
தூங்கி எழுந்தவுடன் தண்ணீர் குடிப்பது நம் உடலுக்கு அதிக அளவு ஆரோக்கியத்தை அளிக்கின்றது. இது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும். அதை பற்றி இந்த பதிவில் காணலாம். நீரின்றி அமையாது உலகு என்று திருவள்ளுவர் கூறியது போல நீர் இல்லாமல் உலகத்தில் செடி, கொடி மரங்கள் முதல் மனிதன் வரை எந்த உயிரும் வாழ முடியாது. மனிதனின் உடலில் சராசரியாக 60 சதவீதம் தண்ணீர் உள்ளது. ஒவ்வொருவரும் தேவையான அளவு […]

You May Like