fbpx

வில் போன்ற புருவங்கள் வேண்டுமா.? சமையலறையில் இருக்கும் இந்த பொருட்களை ட்ரை பண்ணி பாருங்க.!

பெண்களின் அழகை வர்ணிக்கும் போது அவர்களது கண்களை வர்ணிக்காமல் எந்த கவிஞனும் இருந்ததில்லை. சுமாரான முக அழகு பெற்றிருக்கும் பெண்கள் கூட கண்கள் அழகாக இருந்தால் பேரழகிகளாக தெரிவார்கள். கண்களின் அழகிற்கு முக்கிய பங்கு வகிப்பது புருவங்கள் தான். வில் போன்று அமைந்திருக்கும் புருவங்கள் கண்களின் அழகை பேரழகாக காட்டும். ஆனால் சிலருக்கு என்னதான் செய்தாலும் புருவங்களில் முடி வளராமல் இருக்கும். இந்தப் பிரச்சினைகளை இயற்கை முறையிலேயே எப்படி சரி செய்வது என்று பார்ப்போம்.

அடர்த்தியான புருவங்களை பெறுவதற்கு விளக்கெண்ணெய் ஒரு சிறந்த மருந்தாகும். தூங்குவதற்கு முன் புருவங்களில் விளக்கெண்ணெய் தேய்த்து தூங்கினால் அந்த இடங்களில் அடர்த்தியான முடிகள் வளரும். மேலும் தேங்காய் எண்ணெயை லேசாக சூடு செய்து வெதுவெதுப்பான சூட்டில் புருவங்களில் தடவி மசாஜ் செய்து வர புருவங்களின் முடி அடர்த்தியாக வளரும். புருவங்கள் அடர்த்தியாக வளர மற்றொரு சிறந்த மருந்து வெங்காயச்சாறு.

சின்ன வெங்காயத்தை நன்றாக அரைத்து அந்த சாரினை ஒரு பஞ்சில் நனைத்து தூங்குவதற்கு முன் புருவங்களில் தேய்த்து வர புருவ முடிகள் நன்றாக வளரும். வெங்காயத்தில் இருக்கக்கூடிய ஊட்டச்சத்துக்கள் புருவங்களில் முடி வளர்ச்சியை தூண்டுகிறது. மேலும் கற்றாழையின் உள்ளிருக்கும் ஜெல் போன்ற திரவத்தை எடுத்து புருவங்களின் தேய்த்து வந்தாலும் அடர்த்தியாக வளரும். கற்றாழையில் இருக்கக்கூடிய கிருமிநாசினிகள் உருவங்களில் இருக்கக்கூடிய கிருமி தொற்றுக்களை நீக்கி முடி வளர்ச்சியை அதிகப்படுத்தும்.

புருவ முடிகளின் வளர்ச்சிக்கு அழகு சாதன கடைகளில் கிடைக்கும் சீரம் மருந்துகளையும் பயன்படுத்தலாம். இரவில் உறங்குவதற்கு முன் முகத்தை நன்றாக கழுவி புருவங்களில் சீரம் மருந்துகளை அப்ளை செய்து விட்டு தூங்க வேண்டும். காலை எழுந்தவுடன் முகத்தை நன்றாக கழுவ வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வர புருவ முடிகளின் அடர்த்தி அதிகரிக்கும். இதோடு மட்டுமல்லாது வைட்டமின்கள் நிறைந்த கேரட் மற்றும் கீரை வகைகளை அதிகம் சாப்பிடுவதன் மூலமும் புருவ முடிகளின் வளர்ச்சி அதிகரிக்கும்.

Next Post

"எப்புட்றா.?" உங்கள் வயது மற்ற கிரகங்களில்..? ஒரு சின்ன கணக்கு போட்டு பார்ப்போமா.!

Wed Nov 29 , 2023
ஒருவரது வயது என்பது அவரது பிறந்த வருடம் மற்றும் தேதி ஆகியவற்றில் இருந்து கணக்கிடப்படுகிறது. உதாரணத்திற்கு ஒருவர் 01.01.2000 ஆண்டில் பிறந்திருந்தால் தற்போது அவரது வயது 23 வருடங்கள் மற்றும் 91 நாட்கள் இருக்கும். மக்களின் அடிப்படையில் பார்த்தால் 8,732 நாட்கள் என இருக்கும். அவரது அடுத்த பிறந்த நாள் 01.01.2024 தேதியில் வரும். ஆனால் இந்த கணக்கு நமது பூமியை சுற்றி இருக்கும் மற்ற அனைத்து கிரகங்களிலும் இதுபோன்று […]

You May Like