fbpx

உடல்நிலை, மனநிலை பிரச்சனைகளில் இருந்து விடுபட!… இதையெல்லாம் ஃபாளோ பண்ணுங்க!… சம்மர் டிப்ஸ் உங்களுக்காக!

கோடையில் சுட்டெரிக்கும் வெயில் காரணமாக சருமத்திற்கும், உடலுக்கும் தீங்கு விளைவிப்பதோடு மட்டுமல்லாமல் பல நோய்களும் நம்மை தாக்குகிறது. இதில் இருந்து விடுபட சம்மர் டிப்ஸ் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

ஆண்டின் மற்ற பருவங்களை விட கோடை காலத்தில் பல நோய்கள் ஏற்படும்.அடிக்கும் வெயிலுக்கு சூரியனில் இருந்து வரும் புற ஊதா (UV) கதிர்கள் சரும செல்களை சேதப்படுத்துவதால் சன்பர்ன் என்ற பிரச்சனை ஏற்படுகிறது. அதாவது, தோல் சிவந்து போதல், சிவந்த தோலை தொடும் போது வலி அல்லது எரிச்சல், சோர்வு, லேசான தலைச்சுற்றல், வயிறு தொடர்பான பிரச்சனைகள் மற்றும் ​​மனநிலை மாற்றங்களின் பிரச்சனையும் வரும். இதனை தடுக்க சில வழிகளை பார்க்கலாம். கோடை காலம் தொடங்கினாலே வெயிலை சமாளிக்க மக்கள் முதலில் குளிர்பானம், பாக்கெட் ஜூஸ் போன்றவற்றை குடிக்கத் தொடங்குவார்கள். ஆனால், இது மாறாக நீரேற்றத்திற்கு காரணமாகிறது. இது உடல்நிலைக்கு தீங்கு விளைக்கும். அதே நேரத்தில், அவை செரிமான அமைப்பையும் பாதிக்கின்றன. குளிர்பானங்களில் இருக்கும் கார்பன் டை ஆக்சைடு வயிற்றில் ப்ளீச்சிங் ஏஜென்டாக செயல்படுகிறது, இதன் காரணமாக வயிற்றில் உற்பத்தியாகும் செரிமான நொதிகள் பாதிக்கப்படுகின்றன.

கோடையில் காரமான மற்றும் வறுத்த உணவுகளை சாப்பிடுவதும் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. இது செரிமான அமைப்பை பாதிப்பதால் பித்தம் அதிகமாகி, உடல் உஷ்ணம் அதிகரித்து அதிக வியர்வை, நீரிழப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. கோடைக்காலத்தில் தீவிர உடற்பயிற்சிகளை தவிர்க்க வேண்டும், ஏனெனில் கோடை காலத்தில் அதிக வியர்வை வெளியேறும், தொடர்ந்து அதிக உடற்பயிற்சி செய்யும் போது, அது நீரிழப்பு பிரச்சனையை ஏற்படுத்தும். அத்தகைய சூழ்நிலையில், உடற்பயிற்சியில் இருந்து உங்களை விலக்கி வைக்காதீர்கள், லேசான உடற்பயிற்சி செய்யுங்கள்.

கோடைப் பருவத்தில், அதிக பழங்கள் மற்றும் காய்கறிகளை எடுத்துக்கொள்ளுங்கள். மேலும், பிரஷ் குடிப்பதால் உடலுக்கு ஆற்றலை கொடுத்து நம்மை சுறுசுறுப்பாக வைக்க உதவும். இரவில் எப்போதும் லேசான உணவை உண்ணுங்கள். அதாவது உணவுடன் சாலட், தயிர் உள்ளிட்ட குளிர்ச்சியானவைகளை கலந்து சாப்பிடுவதால் உடல்நிலைக்கு நல்லது. மேலும், இந்த கோடை வெயிலுக்கு சற்று கூடுதலாக தூங்கினால் மனநிலை சார்ந்த பிரச்சனைகளும் தடுக்கலாம்.

Kokila

Next Post

சாமானிய மக்களுக்கு குட்நியூஸ்.. 651 அத்தியாவசிய மருந்துகளின் விலை குறைப்பு.. எத்தனை சதவீதம் தெரியுமா..?

Tue Apr 4 , 2023
651 அத்தியாவசிய மருந்துகளின் விலை ஏப்ரல் 1 முதல் 6.73 சதவீதம் குறைந்துள்ளதாக தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் தெரிவித்துள்ளது. ஏப்ரல் 1, 2023 முதல், பல அத்தியாவசிய மருந்துகளின் விலைகள் 12.12 சதவீதம் உயரும் என நிர்ணயிக்கப்பட்டிருந்தது.. இந்த நிலையில் சாமானிய மக்களுக்கு ஒரு பெரிய நிவாரணமாக, மோடி அரசாங்கம் மருந்துகளில் உச்சவரம்பு விலையைக் கட்டுப்படுத்தியுள்ளது.. இதனால் அத்தியாவசிய மருந்துகளின் விலை குறையும் என்று கூறப்படுகிறது.. தேசிய […]

You May Like