சென்னை, தமிழகத்திற்கான ஜிஎஸ்டி நிலுவைத்தொகை அனைத்தும் வழங்கப்பட்டுள்ளது என பாரதிய ஜனதா கட்சித் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று செய்தியார்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியது பின்வருமாறு,
தமிழகத்திற்கு கொடுக்க வேண்டிய ஜிஎஸ்டி தொகை அனைத்தும் வழங்கப்பட்டு விட்டது. எனவே திமுக அரசு தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வில்லை என்பதை மறைப்பதற்கு மத்திய அரசை குறை சொல்னால் எப்படி?. ஒன்பது கோடி பேர் பயண்டுத்தும் உஜ்வாலா சிலிண்டர் விலையை குறைத்ததின் மூலம் மக்கள் அனைவரும் பயனடைந்து உள்ளனர்.
4.07 % நிதி பகிர்வு வருகிறது என்று தமிழக நிதியமைச்சர் கூறுகிறார். 39,750 கோடி மத்திய அரசு தமிழக அரசுக்கு கொடுத்துள்ளது. அது பற்றியெல்லாம் பேசவில்லை. குஜராத், உத்தர பிரதேசத்தை , விட தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை அதிகமாக இருக்கிறது. ஜிஎஸ்டி கவுன்சிலில் 56 பரிந்துரைகளும் ஒரு மனதாக ஏற்ற பின்னரே வரி அமலானது. மேலும் மாநில நிதி அமைச்சரின் நேற்றைய அறிக்கை முன்னுக்கு பின் முரணாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.